தாலியும் இல்ல.. பொட்டும் இல்லை! அப்பறம் எப்படி கணவனுக்கு பிடிக்கும்! நீதிபதியின் கருத்தால் சர்ச்சை!
மும்பை: புனே நீதிமன்றத்தில் நடந்த ஒரு குடும்ப வன்முறை தொடர்பான வழக்கில், நீதிபதி கூறிய சில கருத்துகள் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. தாலி, பொட்டு வைக்கவில்லை என்றால் உங்களை எப்படி கணவரை பிடிக்கும் என நீதிபதி கேட்டதாக புனேயைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் லிங்க்டின் தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனே நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கில் சமரசக் கூட்டம் நடந்துள்ளது அப்போது, அந்த நீதிபதி, வழக்கில் விசாரணைக்காக ஆஜரான பெண்ணிடம், "நீங்கள் மாங்கல்யம் மற்றும் நெற்றிப் பொட்டு வைக்கவில்லை போடவில்லை. திருமணமான பெண்ணைப் போல நடக்கவில்லை என்றால், உங்கள் கணவர் உங்களை விரும்புவாரா?" என்று கேள்வி எழுப்பினாராம்.

இந்த விவகாரத்தை புனேயைச் சேர்ந்த வழக்கறிஞர் அங்கூர் ஜஹகிர்தார் தனது லிங்க்டின் பதிவின் மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளார். இந்தக் கேள்வி பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் விவாதம் முளைத்துள்ளது.
பழமையான எண்ணங்களைத் திணிக்கும் விதமாக நீதிபதி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அங்கூர் ஜஹகிர்தார் மற்றொரு சம்பவத்தையும் நினைவு படுத்தியுள்ளார். அதில், ஒரு நீதிபதி, "பெண்கள் தங்களை விட அதிகம் சம்பாதிக்கும் கணவர்களை விரும்புகிறார்கள். ஆனால் ஆண்கள் எந்த நிலையிலிருந்தாலும் திருமணம் செய்ய தயார்" என்றார் என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அங்கூர் தனது பதிவில் இந்த கருத்தை பதிவு செய்திருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நீதிமன்றங்களில் இன்னும் பழமையான கருத்துக்களும் பாலின பாகுபாடும் இருக்கிறதா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பி உள்ளதாகவும், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நீதிபதிகள் முடிவு எடுக்க வேண்டிய நிலையில் இப்படி பழமைவாத கருத்துக்களை வெளிப்படுத்துவது சரியா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
நீதிமன்றங்களில் கூட இப்படி கருத்துக்கள் வருவது சமூகத்தில் உள்ளே இருக்கும் பாலின பாகுபாட்டை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என பலரும் குற்றம் சாட்டுகின்றனர். நீதிபதிகள் கூறும் கருத்துக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் அல்லது புகார் அளிக்க முடியாத நிலை இருப்பதால் அத்தகைய கருத்துக்கள் அடிக்கடி நீதிமன்றங்களில் இருந்து வெளிவருவது பெரும் பிரச்சினையாக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. பாலின சமத்துவம் பழமை வாத கருத்துக்கள் இன்னும் நீதிமன்றங்களை இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாகவும், சட்ட அமைப்புகள் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications