கைதாவதற்கு முன்னர் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் பஞ்ச் பேசிய ராஜ் குந்த்ரா.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
மும்பை: நீங்கள் பீரங்கி டேங்கராக இருந்தால் உங்களை யாரும் தடுக்க முடியாது என ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்படுவதற்கு முன்னர் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வைத்து நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகிறார்கள்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் பிரிட்டன் தொழிலதிபர். இவர் வெப் சீரிஸ் தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.
இவர் ஆபாச படங்களை தயாரித்து குறிப்பிட்ட செயலிகளில் பதிவேற்றம் செய்து காசு சம்பாதித்து வருவதாக கடந்த பிப்ரவரி மாதம் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆபாச படங்களை தயாரித்த.. ஷில்பா ஷெட்டியின் கணவர்.. அதிரடியாக கைது செய்த மும்பை போலீஸ்@

போலீஸார் விசாரணை
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு ராஜ் குந்த்ரா உள்பட 9 பேரை மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அதிரடியாக கைது செய்தது.

ராஜ்குந்த்ரா கைது
இந்த நிலையில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்படுவதற்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். ஜேம்ஸ் படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் ஜேம்ஸ் பாண்டின் முகத்திற்கு பதில் ராஜ் குந்த்ராவின் முகம் வைக்கப்பட்டுள்ளது.

ஹேஷ்டேக்
அவர் கூறுகையில் ஜேம்ஸ் பாண்ட், நீங்கள் பீரங்கி டேங்கராக இருந்தால் உங்களை யாராலும் இன்று தடுத்து நிறுத்த முடியாது என குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் சாலை தடுப்புகள் தற்காலிகமானதுதான். எதுவும் உங்களை தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டு #mondaymotivation என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுத்த குந்த்ரா
இந்த நிலையில் மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுத்த ராஜ் குந்த்ரா, இப்படி திடீரென கைதானதை அடுத்து அவரது வீடியோ டிரோல் செய்யப்படுகிறது. ஜேம்ஸ் பட வீடியோவை பதிவு செய்ததற்காக ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டாரா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications