"நாங்கள் இந்துக்கள் தான்.. இந்தி இல்லை.." பள்ளிகளில் கட்டாய இந்தி மொழி.. பொங்கி எழுந்த ராஜ் தாக்கரே
மும்பை: புதிய கல்விக் கொள்கையை மகாராஷ்டிரா அமல்படுத்தும் நிலையில், அங்கு 2025-26 கல்வியாண்டிலிருந்து மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி கட்டாய மூன்றாம் மொழியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இதை மிகக் கடுமையாக எதிர்த்துள்ள மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, தாங்கள் இந்துக்கள் தானே தவிர இந்தி இல்லை என்றும் இந்தி மயமாக்கலுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. அதை மெல்ல அமல்படுத்தவும் தொடங்கிவிட்டன. அதன்படி மகாராஷ்டிராவில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் சூழலில், 2025-26 கல்வியாண்டிலிருந்து மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி கட்டாய மூன்றாம் மொழியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

ராஜ் தாக்கரே தாக்கு
இதற்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தி கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றப்படுவதை அவர் கடுமையாக எதிர்த்தார். இந்த மொழி கட்டாயம் என்பதைத் தனது கட்சி ஒருபோதும் ஏற்காது என்ற அவர், மகாராஷ்டிராவில் அனைத்தையும் இந்தி மயமாக்க முயலும் மத்திய அரசை அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார்.
இந்துக்கள் தான்.. இந்தி இல்லை
இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டில், "நாங்கள் இந்துக்கள் தான்.. ஆனால் இந்தி அல்ல! மகாராஷ்டிராவை இந்தி மாநிலம் என்று சித்தரிக்க முயன்றால்.. அதற்கு எதிராக மகாராஷ்டிராவில் ஒரு போராட்டம் நிச்சயம் இருக்கும். இதையெல்லாம் பார்த்தால், வேண்டுமென்றே இந்தப் போராட்டத்தை அரசு உருவாக்குகிறது என்பது போலவே இருக்கிறது. வரவிருக்கும் தேர்தல்களில் மராத்தி மற்றும் மராத்தி அல்லாத மக்களுக்கு இடையே ஒரு போராட்டத்தை உருவாக்கி அதைப் பயன்படுத்திக் கொள்ள பாஜக முயல்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தி ஒரு தேசிய மொழி இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறிய ராஜ் தாக்கரே, பிறகு ஏன் மகாராஷ்டிராவில் உள்ள மாணவர்களுக்குத் தொடக்கம் முதல் இந்தியை அதைக் கற்பிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்தியைத் திணிக்காதீர்கள்
அவர் மேலும் கூறுகையில், "உங்கள் மும்மொழி பார்முலா எப்படி இருந்தாலும் சரி, அதை அரசு விவகாரங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். கல்வியில் அதைத் திணிக்காதீர்கள். இந்த நாட்டில் மொழி அடிப்படையிலேயே மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.. ஆனால் இப்போது ஏன் மகாராஷ்டிராவின் மீது மற்றொரு பிராந்திய மொழியைத் திணிக்கத் தொடங்கியுள்ளீர்கள்? இது மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டதையே அர்த்தமில்லாமல் செய்கிறது" எனச் சாடியுள்ளார்.
மகாராஷ்டிர அரசு
2025-26 கல்வியாண்டில் தொடங்கி புதிய கல்விக் கொள்கை செயல்படுத்துவதற்கான விரிவான திட்டத்தை மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ளது.. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5 ஆம் வகுப்புகளில் இந்தியைக் கட்டாய மூன்றாம் மொழியாக அறிமுகப்படுத்துவதாகும். இந்தக் கொள்கையை படிப்படியாக செயல்படுத்த மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது, 2025-26ஆம் ஆண்டில் 1 ஆம் வகுப்பில் தொடங்கி 2028-29ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது..
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications