உத்தவ் தாக்கரே கான்வாய் மீது சாணம், தேங்காய் வீச்சு! பதிலடியாக நடந்த சம்பவத்தால் மும்பையில் பதற்றம்!
மும்பை: சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரேவின் கான்வாய் மீது ராஜ் தாக்கரேவின் மகா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் தேங்காய் மற்றும் மாட்டு சாணத்தால் தாக்கியுள்ளனர். ராஜ் தாக்கரேவின் கார் மீது பாக்கு கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராகப் பதவி வகித்தவர். தற்போது சிவசேனா இரண்டாகப் பிளவுற்ற நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா UBT அணி செயல்பட்டு வருகிறது. பால் தாக்கரேவின் தம்பி ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ராஜ் தாக்கரே, சிவசேனாவில் இருந்து வெளியேறி கடந்த 2006ல் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா என்ற கட்சியை தொடங்கினார். இந்தக் கட்சி தற்போது மகாராஷ்டிராவில் ஆளும் கட்சி கூட்டணியில் உள்ளது.

ராஜ் தாக்கரே - உத்தவ் தாக்கரே இரு தரப்புக்கும் அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று ராஜ் தாக்கரேவின் வாகனம் பீட் நகரில் சென்று கொண்டிருந்தபோது, சிவசேனாவைச் (UBT) சேர்ந்த சிலர் வெற்றிலை பாக்கை வீசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு, மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கான்வாய் மீது, ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் மாட்டுச் சாணம் வீசியும், தேங்காயை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர். ராஜ் தாக்கரேவின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடந்ததாக எம்என்எஸ் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தவ் தாக்கரே, தானேவில் உள்ள கட்காரி ரங்காயத்தன் என்ற இடத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்றிருந்த எம்.என்.எஸ் தொண்டர்கள், பைகளில் வைத்திருந்த மாட்டுச் சாணத்தை உத்தவ் தாக்கரே கான்வாயின் மீது வீசினர். மேலும், சிலர் தேங்காய்களையும், வளையல்களையும் கான்வாய் மீது வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Uddhav Thackeray convoy attacked with cow dung, tomatoes and bangles by MNS workers as "revenge" of Raj Thackeray's convoy hackle. ☠️ pic.twitter.com/lywRvCt022
— The Hawk Eye (@thehawkeyex) August 10, 2024
உத்தவ் தாக்கரே கான்வாய் மீது சாணம், தேங்காய்களை வீசி தாக்குதல் நடத்திய 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தவ் தாக்கரே மீதான இந்த தாக்குதல் மாநில அரசின் தோல்வி. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இங்கு சட்டம் ஒழுங்கு முற்றிலும் சரிந்துவிட்டது, உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சிவசேனா (யுபிடி) தலைவர் ஆனந்த் துபே கூறி உள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications