அரிதிலும் அரிது! 36 வருடமாக வயிற்றில் இரட்டை குழந்தைகளுடன் வாழ்ந்த ஆண்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் 36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பது தெரியாமல் தொப்பை என நினைத்து இருந்த நபருக்கு மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்த போதுதான் அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சஞ்சு பகத். 1963 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு சிறு வயது முதலே வயிறு பெரிதாக இருந்தது. ஆனாலும் ஆரோக்கியமாக இருந்ததால் குடும்பத்தினரும் இதை பெரிதும் கண்டு கொள்ளவில்லை. கர்ப்பிணி பெண்ணின் வயிறு போலவே பெரிதாகவே இருந்ததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சு பகத்தை பிரக்னன்ட் மேன் என்றே கேலியாக அழைத்து வந்துள்ளனர்.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சஞ்சு பகத்திற்கு வயது ஆக ஆக வயிறும் பெரிதாகவே ஆகிவந்துள்ளது. இதனால் மிகவும் சிரமப்பட்டுள்ளார். உடல் எடையும் அதிகரித்து மூச்சு விடுவதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தினர் சஞ்சு பகத்தை 1999-ம் ஆண்டு மும்பை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரது வயிற்றில் பெரிய கட்டிஎதுவும் இருக்கலாம் என கருதிய மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர்.

பின்னர் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அறுவை சிகிச்சையில் அவரது வயிற்றில் கை,கால்கள், பிறப்பு உறுப்புடன் இரண்டு கரு இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அவற்றை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் சஞ்சு பகத்திற்கு இருந்த பாதிப்பு அரிதிலும் அரிய நோய் பாதிப்பான 'கருவில் கரு' என்பதை கண்டுபிடித்தனர்.
36 ஆண்டுகளாக ஆண்டுகளாக தனது வயிற்றுக்குள் இரட்டை குழந்தைகளை சுமந்து கொண்டு பெரிய வயிறுடன் அவதிப்பட்டு வந்துள்ளார். தற்போது அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். இப்படி கருவுக்குள் கரு என்ற நோய் பாதிப்பு என்பது பிறக்காத இரட்டை குழந்தை உடலில் ஒரு ஒட்டுண்ணி போல வாழ்ந்து வருவதாகவும் என மருத்துவர்கள் கூறினர். அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட பின்னர் அந்த இரட்டை குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர்.
பகத் வயிற்றில் 36 ஆண்டுகளாக இருந்த அந்த கருவை அறுவை சிகிச்சை செய்து எடுத்த பிறகு நான் அதை பார்க்க மாட்டேன் என மறுத்து விட்டாராம். இந்த இக்கட்டான அரிய பிரச்சினையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக அவதிப்பட்டு வந்த சஞ்சு பகத் தற்போது ஆரோக்கியமாக இருந்து வருகிறாராம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications