கடைசியாக ஒரு முறை.. இறுதி ஊர்வலத்தின் போது ரத்தன் டாடாவை பார்த்து வளர்ப்பு நாய் 'கோவா'செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: "கடைசியாக ஒரு முறை" உன் முகத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்.. "போய் வா நண்பா" என்ற அர்த்ததுடன் ரத்தன் டாடாவை அவரது வளர்ப்பு நாய் கோவா பார்த்தபடி நின்றது. இறுதி ஊர்வலத்தின் போது ரத்தன் டாடா முகத்தை அப்படியே பார்த்தபடி வளர்ப்பு நாய் கோவா நின்ற உருக்கமான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக மும்பை பிரீச்கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டத. ஆனால் அவரது உடல்நிலை மோசமானதாக நேற்று மாலை தகவல் வெளியானது. இந்தநிலையில் நேற்று இரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது.

ratan tata mumbai dog

குஜராத் மாநிலத்தில் பிறந்த பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்தார். கடந்த 2012-ல் அவர் ஓய்வு பெற்றார். இதன் பின்னர் அவர் சமூக சேவைகளிலும், எளிமையாக வாழ்வதிலும் ஆர்வம் காட்டி வந்தார். இவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "பணிவு, இரக்கம், அர்ப்பணிப்பு காரணமாக அனைவராலும் கவரப்பட்டவர் ரத்தன் டாடா. தொலைநோக்கு பார்வை கொண்ட அவர், தொழில்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தியவர்" என்று கூறியிருந்தார். 1991ம் ஆண்டு ஏற்பட்ட தாராளமய கொள்ளைக்கு பிறகு இந்தியாவில் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. அதில் ரத்தன் டாடாவின் பங்கு மிகவும் அளப்பறிது. ரத்தன் டாடாவை பற்றி பலரும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

கிரிஷ் குபேர் என்பவர் 'The Tatas: How a Family Built a Business and a Nation' என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அதில், "ரத்தன் டாடாவிடம் 'டிட்டோ' மற்றும் 'டேங்கோ' என்ற இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் இருந்து. அந்தநாய்களை அவர் மிகவும் நேசித்தார். இதேபோல் பம்பாய் ஹவுஸில் உள்ள அலுவலகத்திற்கு ரத்தன் டாடா வரும்போதெல்லாம் தெருநாய்கள் அவரைச் சூழ்ந்துகொள்ளும். தெரு நாய்கள் பெரும்பாலும் பம்பாய் ஹவுஸின் முகப்பு அறையில் (Lobby) அங்குமிங்கும் உலாவும். அந்த அளவிற்குநாய்கள் மீது அதிகபாசம் வைத்திருந்தார்" என்று கூறியிருந்தார்.

அவர் கூறியபடியேதான் இன்றையநாள் இருந்தது. ரத்தன் டாடா உடல் மும்பையில் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டிருந்தது. பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி ஊர்வலத்தின் போது, அவரை பிரிய மனம் இல்லாமல், அவரது உடலின் பக்கத்திலேயே உட்கார்ந்து அவரது முகத்தை அப்படியே பார்த்தபடி நின்றது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+