மகாராஷ்டிராவில் திடீரென பாஜக ஆட்சியை கைப்பற்றியது ஏன்? ரவிசங்கர் பிரசாத் சொல்வது இதுதான்
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், செய்த சதியை பாஜக முறியடித்துள்ளது என்று, மத்திய அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் அஜித் பவாருடன் இணைந்து, பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இதுகுறித்து ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
அரசு அமைப்பதற்காக ஆளுநர் வாய்ப்பு கொடுத்தபோதிலும், இதுவரை, சிவசேனா உரிமைகோரவில்லை. மற்றொரு பக்கம், பாஜக 2014 ஆம் ஆண்டை விட மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. எனவே, இதில் பாஜகவை சிவசேனாவால் எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது.

ஓட்டு போட்டனர்
தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என்றுதான், தேர்தலில் பிரச்சாரம் செய்தோம். மக்கள் அதற்காகவே, பாஜக-சிவசேனா கூட்டணிக்கு வாக்களித்தனர். இப்போது அவருக்கே முதல்வர் பதவியை தர முடியாது என சிவசேனா கூறியது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்.

மக்கள் கேள்வி
மக்களின் தீர்ப்பு பாஜகவுக்கு ஆதரவாக இருந்தபோதிலும், இதுவரை ஏன் ஆட்சியை அமைக்க பாஜக முன்வரவில்லை, என்று மகாராஷ்டிராவில் மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர். உங்களுக்கு அதிக எம்எல்ஏக்களை கொடுத்தோம், ஆனால் நீங்கள் ஏன், இந்த அசுத்தமான கூட்டணியை உருவாக அனுமதிக்கிறீர்கள் என பாஜகவை பார்த்து மக்கள் கேட்கிறார்கள். எங்கள் தீர்ப்பை மதியுங்கள் என மக்கள் சொல்லும்போது, அதை ஏற்றுத்தானே ஆக வேண்டும்.

தனி லாபம்
சிவசேனா அதன் மதிப்புகளை "தனிப்பட்ட லாபங்களுக்காக" விட்டுக்கொடுத்தது. தனிப்பட்ட லாபங்களுக்காக ஒரு அசுத்தமான கூட்டணியை உருவாக்கியவர்கள்தான் உண்மையில் சதி செய்தவர்கள். பாஜக அல்ல. காங்கிரசும் என்சிபியும் எங்களை, எதிர்க்கட்சியில் அமர வேண்டும் என்று மக்கள் ஆணையிட்டுள்ளனர், அதை ஏற்போம் என்று கூறிவந்தனர். இப்போது திடீரென்று நாற்காலியைப் பிடிக்க அவர்களுக்கு ஆசை வருவது சரியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சரத் பவார்
இதனிடையே, பாஜக நம்பிக்கை வாக்குகெடுப்பில் தோற்கும் என்று சரத் பவார் கூறியுள்ளார். அஜித் பவாரிடம், என்சிபியின், 10 முதல் 11 எம்.எல்.ஏ.க்கள் கூட இல்லை என்றும், சேனா-காங்கிரஸ்-என்.சி.பி கூட்டணிக்கு தயாரிக்கப்பட்ட ஆதரவு கடிதத்தை எடுத்து சென்று அஜித் பவார் ஆளுநரிடம் வழங்கியதாகவும் சரத் பவார் குற்றம்சாட்டினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications