தாயை விட பெரிய சக்தி எதுவுமில்ல, நாட்டையே திரும்பி பார்க்க வைத்த குட்டி ராக்கிபாய்.. ரியல் கேஜிஎப்
மும்பை: தன்னுடைய அம்மா ரொம்ப தூரம் போய் ஆற்றில் நீர் எடுத்துட்டு வர்றத பார்த்து, வேதனை அடைந்த மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன், தாய்க்காக கிணறு தோண்டி இருக்கிறார். அதில் தண்ணீரும் வந்திருக்கிறது. இந்த ஒற்றை செயலால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் அந்த குட்டி ராக்கிபாய்.
இந்த உலகத்துல தாயைவிட பெரிய சக்தி எதுவுமில்ல என்று கூறி தாயின் கனவுக்காக உலகின் தங்கம் எல்லாவற்றையும் சேர்ப்பார் கேஜிஎப் படத்தில் ராக்கிபாய். ஆனால் இங்கு ஒரு குட்டி ராக்கிபாய் தனது தாய்க்காக தனியொருவனாக கிணறு தோண்டி தண்ணீரை வரவைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஹெல்வி கிராமத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பிரணவ் ரமேஷ் சால்கர். 14 வயதாகும் பிரணவ் ரமேஷ் அந்த பகுதியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது தாய்க்கு கடைசி மகன் ஆவார்.
பிரணவ் தான் சமீபத்தில் சூர்யமின்சக்தி தகடுகளை மோட்டார் சைக்கிள் பேட்டரியில் இணைத்து தன்னுடைய குடிசையில் விளக்கு எரிய வைத்துள்ளார்.

இந்த நிலையில் என்னுடைய ரொம்ப தூரம் போய் ஆற்றில் தண்ணீர் எடுத்து வருகிறார். அவங்க பாவம் ரொம்ப கஷ்டப்படுறாங்கன்னு வேதனை அடைந்த 14 வயது சிறுவன் பிரணவ், கடப்பாறை, மண் வெட்டி, ஏணி, இது எல்லாவற்றையும் தயார் செய்து, வீட்டு முற்றத்திலேயே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
கோடை வெயிலை கூட பொருட்படுத்தாமல் பிரணவ் கிணறு தோண்டக்கூடிய பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தாராம். உணவு சாப்பிடுவதற்காக மட்டும் ஒரு 15 நிமிடம் பிரேக் எடுத்திருக்கிறார். அதன்பிறகு நாள் முழுவதுமே கிணறு தோண்டும் பணியில் ஈடுபடுவாராம்.

ஐந்து நாட்கள் தொடர்ந்து கிணறு தோண்டியிருக்கிறார். 20 அடி ஆழம் தோண்டியதுமே கிணற்றில் இருந்து தண்ணீர் வர ஆரம்பித்துள்ளது. இதை பார்த்த பிரணவ் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இந்த கிணறு பிரணவினுடைய குடும்பத்திற்கு ஒருபெருமை மிகுந்த சொத்தாகவே மாறி இருக்கிறது. இந்த கிணற்றை பார்ப்பதற்காக ஹெல்வி கிராமத்திற்கு பல பேர் வந்து செல்கிறார்களாம். மேலும் பிரணவினுடைய பள்ளி ஆசிரியரும் நேரில் வந்து கிணற்றை பார்வையிட்டு போயிருக்காங்களாம். மேலும் பிரணவினுடைய சாதனையை பாராட்டி உள்ள கெல்வி கிராமத் தலைவர், பிரணவின் வீட்டிற்கு அடிப்படை வசதிகள் செய்து தர முன்வந்திருக்கிறாராம். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்ப பலபேர் பிரணவை பாராட்டிக்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications