ரிலையன்ஸ் ஜியோவின் சூப்பர் தீபாவளி ஆஃபர்.. கூடவே வெளியிட்ட அறிவிப்பு தான் ஹைலைட்டே!
மும்பை: ஜியோ நிறுவனம் தீபாவளி ஆஃபர் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 1500 ரூபாய்க்கு விற்கப்படும் ஜியோ போனை தீபாவளி சலுகையாக ரூ. 699க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27ம் தேதி கொண்டாப்படுகிறது. வட மாநிலங்களில் அக்டோபர் 26 தொடங்கி 27 , 28 என தொடர்ந்து ஐந்து நாள் வரை தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சலுகைககளை பல்வேறு துறை நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இதேபோல் தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அளிப்பது வழக்கம்.

சலுகை விலையில் போன்
அந்த வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் ஜியோ போனை விற்பதாக அறிவித்துள்ளது.

2ஜி போனை விட குறைவு
இது தொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ரூ.1500 மதிப்புள்ள 4ஜி சேவை உடைய ஜியோ போன் ரூ.699க்கு விற்பனை செய்யப்படும். இந்த விலை சந்தையில் உள்ள 2 ஜி அம்ச தொலைப்பேசிகளை விட மிகக்குறைவு. எனவே 2ஜி போனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை 4ஜி அம்சங்கள் நிறைந்த தொலைப்பேசி சேவைபை பயன்படுத்துவதில் உள்ள தடைகள் இப்போது நீக்கப்பட்டுள்ளது.

போன் வாங்கினால் சலுகை
தீபாவளி 2019 சலுகையின் கீழ் ஜியோ போன் வாங்குபவர்களுக்கு ரூ.700 மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் முதல் 7 ரீசார்ஜ்களுக்கு கூடுதலாக ரூ.99 மதிப்புள்ள டேட்டா பலன்கள் கிடைக்கும்.

மோடியின் டிஜிட்டல் இந்தியா
எந்தவொரு இந்தியனும் மலிவான இணைய வசதி மற்றும் டிஜிட்டல் புரட்சியின் பலன்களை இழக்காமல் இருப்பதை ஜியோ உறுதி செய்யும். ‘ஜியோபோன் தீபாவளி பரிசு' வழங்குவதன் மூலம், பொருளாதாரத்தில் அடித்தட்டில் உள்ள ஒவ்வொருவரையும் இணைய பொருளாதாரத்திற்கு கொண்டு வருவதற்காக ரூ .1,500 முதலீடு செய்கிறோம். இது நமது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டமான டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றிக்கான எங்கள் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது" இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications