Jio Bharat V2 4G: ரிலையன்ஸ் ஜியோ களமிறக்கிய ரூ999 மலிவு விலை ஜியோ பாரத் மொபைல்!
மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ரூ999-க்கு ஜியோ பாரத் மொபைல் போனை களமிறக்கி உள்ளது. 2ஜி செல்போன் பயனாளர்களை அப்படியே 4 ஜிக்கு மாற்றும் நோக்கத்துடன் ஜியோ பாரத் மொபைல் போனை அறிமுகம் செய்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.
இந்தியாவில் 2ஜி நெட்வொர்க்கை 25 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இவர்களை இலக்கு வைத்து அப்படியே 4ஜி நெட்வொர்க்குக்கு கொண்டு வரும் வகையில் ஜியோ பாரத் போன் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 2ஜி நெட்வொர்க் சேவைக்கு முடிவு கட்டும் ஜியோ பாரத் என்பது ரிலையன்ஸ் நிறுவனத்தின் நம்பிக்கை.

ஜியோ பாரத் மொபைல் போன் ஜூலை 7-ந் தேதி முதல் சந்தையில் அறிமுகமாகிறது. முதல் கட்டமாக 10 லட்சம் ஜியோ பாரத் போன்கள் விற்பனைக்கு இறக்கப்படுகிறது. நாட்டின் பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் ஜியோ பாரத் விற்பனை தொடங்கப்படவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
அத்துடன் ரீ சார்ஜ் கட்டணங்களிலும் அசத்தல் சலுகைகளை அள்ளி தெறிக்கவிட்டுள்ளது ஜியோ நிறுவனம். ரூ123க்கு ரீசார்ஜ் செலுத்தினால் அன்லிமிடெட் போன் கால்கள் ப்ளஸ் 14 ஜிபி டேட்டா பெறலாம். பொதுவாக செல்போன் நிறுவனங்கள் 2ஜிபி டேட்டா பிளஸ் அன்லிமிடெட் கால்ஸ் என்ற சலுகையை ரூ179-க்கு தற்போது சந்தையில் விற்பனை செய்து வருகின்றன. இதனை தலைகீழாக மாற்றுகிறது ஜியோ பாரத் போன். பொதுவாக இதர நிறுவனங்களை ஒப்பிடுகையில் மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்கள் 30% குறைவாம். டேட்டா அளவும் 7 மடங்கு அதிகமாம்.
ஒரு ஆண்டுக்கு ரூ1234 ரீசார்ஜ் செலுத்தினால் அன்லிமிடெட் கால்ஸ் பிளஸ் 168 ஜிபி டேட்டா பெற முடியும் என்கிறது ஜியோ நிறுவனம்.
ரூ999-க்கு விற்பனை செய்யக் கூடிய இந்த பட்டன் செல்போனில் வழக்கமான போனின் அடிப்படை அம்சங்களான கேமரா, ஹெட்போன் ஜாக், எஸ்டி கார்டு ஆகியவையும் இருக்கிறது. ஸ்மார்ட் போனில் பயன்படுத்தக் கூடிய யூபிஐ பண பரிமாற்றத்தையும் இதில் மேற்கொள்ளவும் முடியும் என்கிறது ஜியோ நிறுவனம்.
Step into a 4G-powered digital life with #JioBharat at ₹999/- only. ⚡#DigitalIndia #JioSaavn #JioCinema #Music #India #Bharat pic.twitter.com/PSUDDxd6Oj
— Reliance Jio (@reliancejio) July 3, 2023
Get Ready for #JioBharat 🇮🇳🙏 #WithLoveFromJio ❤️ #DigitalIndia #JioSaavn #JioCinema #Music #India #Bharat pic.twitter.com/C60WK7Nzvg
— Reliance Jio (@reliancejio) July 3, 2023
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications