90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்.. மறைந்த விளம்பர ஜாம்பவான் பியூஸ் பாண்டேவை மறக்க முடியுமா? இரங்கல்
மும்பை: 40 ஆண்டுகளாக இந்திய விளம்பர துறையில் ஜாம்பவனாக வலம் வந்த பியூஸ் பாண்டே உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. 90ஸ் கிட்ஸ்களின் மனதை விளம்பரத்தின் மூலமாக கொள்ளையடித்து ‛கிரியேட்டிவ் கிங்' ஆக வலம் வந்த பியூஸ் பாண்டேவின் மரணத்துக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சிவாஜி நகரில் வசித்து வந்தவர் பியூஸ் பாண்டே. இவர் ‛ஓகில்வி இந்தியா' (Ogilvy India) என்ற விளம்பர நிறுவனத்தின் செயல் தலைவராகவும், சர்வதேச தலைமை கிரியேட்டிவ் அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தார்.

இவருக்கு வயது 70. இந்நிலையில் தான் அக்டோபர் 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) பியூஸ் பாண்டே மறைந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் காலமானார். இவர் இந்தியாவின் விளம்பர துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். தனது ‛கிரியேட்டிவிட்டி' திறமையால் விளம்பரங்களை உருவாக்கி பல தயாரிப்புகளை பிரபலமாக்கியவர்.
இன்னும் சொல்லப்போனால் 90ஸ் கிட்ஸ்கள் ரசித்த பல விளம்பரங்களின் மூளையே இவர் தான். அதுமட்டுமின்றி ‛மேட் இன் இந்தியா' தயாரிப்புகளை தனது சொந்த குரலில் விளம்பரங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தவர். மேற்கத்திய கலாசாரம் முறையில் வெளிவந்து கொண்டிருந்த விளம்பரங்களை தனது தனி ஸ்டைலில் எளிமையாக புரியும்படி உருவாக்கி ஹிந்தி மொழி பேசும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
‛பெவிகால் முதல் கேட்பர்ரி டெய்லி மில்க்' சாக்லேட் வரை பல விளம்பரங்கள் இன்னும் மக்கள் மத்தியில் மறையாமல் உள்ளன. தனது கிரியேட்டிவிட்டி திறமையால் கடந்த 40 ஆண்டுகளாக இந்திய விளம்பர துறையில் ஆண்டு வந்தவர். இவர் அவர் கேன்ஸ் லயன்ஸ் மற்றும் ஏபிபிஒய் விருதுகள் உட்பட 1000 க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி ‛கேன்ஸ் லயன்ஸ் ஃப்ரெஸ்டிவல் ஆஃப் கிரியேட்டிவிட்டி' விழாவில் ஆசியாவிலிருந்து முதல் ஜூரி தலைவராக அவர் தேர்வு செய்தது வரலாற்றில் முதல் முறையாகும். இது அவரது உலகளாவிய புகழை பறைசாற்றும் வகையில் உள்ளது. 2013ல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றார். இதன்மூலம் முதல் முறையாக பத்மஸ்ரீ விருது வென்ற விளம்பர துறையை சேர்ந்த நபர் என்ற புகழை பெற்றார்.
பியூஸ் பாண்டே மறைவுக்கு பலரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்தவர்களும் பியூஸ் பாண்டேவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Wizcraft International Entertainment நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆண்ட்ரூ டிம்மின்ஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‛‛ தலைமுறை தலைமுறையாக தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த படைப்பாற்றல் கொண்ட பியூஸ் பாண்டேவின் வாழ்க்கையையும், மரபையும் இன்று போற்றுகிறோம். அவர் விளம்பரங்களை மட்டும் உருவாக்கவில்லை. அவர் கலாச்சாரங்களையும் சேர்த்து உருவாக்கினார். அவரது படைப்பு இந்தியாவில் ஆழமாக வேரூன்றி உள்ளது. அவரது கிரியேட்டிவிட்டி என்பது எளிமையானதாகவும், நேர்மையானதாகவும், நகைச்சுவையானதாகவும், மனிதமாபிமானம் கொண்டதாகவும் இருந்தது. இப்போது அவர் கலாசாரத்துடன் சேர்ந்த விளம்பரங்களை அடுத்த தலைமுறைகளுக்கு விட்டு சென்றுள்ளார்'' என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதேபோல் எழுத்தாளரும், நகைச்சுவை நடிகரும், விளம்பர துறையில் செயல்பட்டு வருபவருமான நெவில் ஷா கூறுகையில், ‛‛
"ஒவ்வொரு வார்த்தைகளும் அதன் அர்த்தத்துக்கு நியாயம் சொல்ல முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நம் தொழில் துறையில் அவரது வார்த்தைகள், படைப்புகள், அவரது வார்த்தைகளை கேட்டு தான் நாம் வாழ்ந்தோம். இந்த முழு தலைமுறையும் அவருடன் தான் வாழ்ந்தது. பியூஷ் அப்படித்தான் இருந்தார்" என்று கூறியுள்ளார்.
நுவாமா குழுமத்தை சேர்ந்த தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி சுஜய் ராச் கூறுகையில், ‛‛"இந்திய விளம்பரத்தின் மனசாட்சியாக இருந்தவர். விளம்பர துறையில் ஆரோக்கிய போட்டிக்கு காரணமாக இருந்தவர். பியூஸ் பாண்டே போன்றவர்கள் உண்மையில் நம்மை விட்டு ஒருபோதும் பிரிந்து செல்வது இல்லை. அவர்கள் உருவாக்கிய விளம்பரங்கள், செய்த பணி, பின்பற்றிய கலாசாரம் உள்ளிட்டவற்றால் இன்னும் வாழ்வார்கள்'' என்று கூறியுள்ளார்.
இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான துருவ் கானேகர் கூறுகையில், ‛‛என்றென்றும் வாழும் லிகஸியை அவர் உருவாக்கி உள்ளார். அவரது அறிவு படைப்பாற்றலில் மட்டுமின்றி மனிதநேயத்திலும் தொடர்ந்தது. விளம்பரம் என்பது குறிப்பிட்ட பொருளை விற்பனை செய்வதை மட்டும் நோக்கமாக கொண்டதாக இல்லை. உணர்வுரீதியாகவும் மக்களை சென்றடைந்தது. அதனை அவர் விளம்பர துறைக்கு கற்பித்து கொடுத்தார்'' என்று கூறியுள்ளார்.
இப்படி பலரும் பியூஸ் பாண்டே மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் அவர் உருவாக்கிய விளம்பரத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனால் பியூஸ் பாண்டே மறைந்தாலும் கூட விளம்பர துறையில் அவர் நிகழ்த்திய ‛கிரியேட்டிவிட்டி' காலம் கடந்தும் மக்கள் மத்தியில் நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
*****
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications