Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நிர்வாண வீடியோ கால்".. வாட்ஸப்பில் மயங்கிய வங்கி அதிகாரி.. ரூ. 18 லட்சத்தை மிரட்டி பறித்த மோசடி கும்பல்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: முகம் தெரியாத பெண்ணுடன் வாட்ஸ் அப்பில் ஏற்பட்ட பழக்கம், நிர்வாணமாக வீடியோ கால் செய்யும் அளவுக்கு சென்றதால் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவர் ரூ.18 லட்சத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சபல புத்தி காரணமாக, தனது ஒட்டுமொத்த சேமிப்பு பணத்தையும் ஒரே நாளில் இழந்து இன்று வீதிக்கு வந்திருக்கிறார் அந்த நபர். மேலும் குடும்ப உறுப்பினர்களின் முகத்தில் முழிக்க முடியாத நிலையும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மூலமாக தற்போது அதிக அளவில் மோசடி நடைபெறுகிறது என போலீஸார் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இதுபோன்ற சபல புத்திக் கொண்ட நபர்கள் மோசடி வலையில் வீழ்வது தொடர் கதையாகி உள்ளது.

தட்டியது சபலம்..

தட்டியது சபலம்..

மும்பையின் புறநகர் பகுதியான மேற்கு பந்த்ராவை சேர்ந்தவர் கெளரவ் (63). பெயர் மாற்றப்பட்டுள்ளது. பிரபல வங்கியில் துணை மேலாளராக பதவி வகித்து வந்த இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். மனைவி, மகள்கள், பேரப்பிள்ளைகள் என மகிழ்ச்சியாக அவர் வாழ்க்கையை நடத்தி வந்தார். இந்த சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு தெரியாத எண்ணில் இருந்து 'ஹாய்' (Hi) என மெசேஜ் வந்துள்ளது. அந்த வாட்ஸ் அப்பை திறந்து பார்த்த போது ஒரு அழகிய இளம்பெண்ணின் புகைப்படம் இருந்தது. இளம்பெண்ணின் புகைப்படத்தை பார்த்ததும் கெளரவுக்கு லேசாக சபலம் தட்டியுள்ளது. உடனே, அவரும் பதிலுக்கு 'ஹாய்' என அனுப்பியுள்ளார்.

நட்பு டூ காதல்..

நட்பு டூ காதல்..

இவர் மெசேஜ் அனுப்பியதுதான் தாமதம். அடுத்த நொடியே, எதிர்முனையில் இருந்து மெசேஜ்கள் வந்து குவிந்தன. "வாட்ஸ் அப்பில் உங்கள் புகைப்படத்தை பார்த்தேன். நீங்கள் ஸ்மார்ட்டாக இருக்கிறீர்கள்" என அந்தப் பெண்ணிடம் இருந்து மெசேஜ் வர, அவ்வளவுதான். கெளரவ் தனது வயதை மறந்து துள்ளிக் குதிக்க ஆரம்பித்தார். குடும்பத்தினருக்கு தெரியாமல் இருவரும் இரவு பகலாக 'சேட்' (Chat) செய்ய ஆரம்பித்தனர். முதலில் நட்பாக இருந்து வந்த அவர்களின் பழக்கம், நாட்கள் செல்ல செல்ல காதலாக மாறியது. காதலை முதலில் தெரிவித்தது கெளரவ் தான்.

ஆபாச வீடியோ கால்

ஆபாச வீடியோ கால்

இனி உன்னிடம் பேசாமல் என்னால் இருக்க முடியாது என கெளரவ் கூறும் அளவுக்கு அவர்களின் பழக்கம் சென்றது. இந்நிலையில், கடந்த மாதம் திடீரென அந்தப் பெண்ணிடம் இருந்து கெளரவுக்கு வீடியோ கால் வந்துள்ளது. அவரும் ஆர்வமாக அதை எடுத்து பார்க்க, எதிர்முனையில் அந்த இளம்பெண் நிர்வாண கோலத்தில் நின்றுள்ளார். கெளரவும் அந்தப் பெண்ணுடன் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசியுள்ளார். பின்னர் காதல் மயக்கத்தில் கெளரவும் ஆடைகளை களைந்து நிர்வாணமாகி உள்ளார். இதனிடையே, சரியாக இரண்டு நிமிடத்தில் அந்த வீடியோ கால் துண்டிக்கப்பட்டது.

மிரட்டிய இளம்பெண்..

மிரட்டிய இளம்பெண்..

பின்னர், அந்தப் பெண்ணிடம் இருந்து சாதாரண காலில் அழைப்பு வரவே கெளரவ் எடுத்து பேசியுள்ளார். இத்தனை நாள் அந்தப் பெண்ணின் பேச்சுக்கும், இப்போது அவரது பேச்சுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருந்தது. அப்போது அவர், அந்த நிர்வாண வீடியோ கால் ரெக்கார்ட் செய்யப்பட்டு விட்டதாகவும், எதிர்முனையில் நீங்கள் பேசிய வீடியோவும் பதிவாகி உள்ளதாகவும் கெளரவிடம் கூறியுள்ளார். மேலும், இந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றாமல் இருக்க வேண்டுமென்றால், 10,000 ரூபாய் வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்கு கெளரவ் பயந்தாலும், பணத்தை கொடுக்கவில்லை.

"டெல்லி போலீஸ் பேசுகிறேன்.."

இதையடுத்து, அடுத்த நாள் கெளரவின் செல்போனை தொடர்பு கொண்ட ஒரு நபர், தன்னை டெல்லி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தினார். மேலும், நீங்கள் ஆபாசமாக பேசிய வீடியோவுடன் ஒரு பெண் புகார் அளித்திருப்பதாக கூறிய அவர், இன்னும் ஒரு மணிநேரத்தில் உங்கள் வீட்டுக்கு போலீஸார் வரப்போகிறார்கள் எனக் கூறியுள்ளார். இதனை கேட்டு பயந்து நடுங்கிய கெளரவ், தனது குடும்பத்துக்கு இந்த விஷயம் தெரிந்தால் தன் மானமே போய்விடும் என்றும், தன்னை விட்டுவிடும் படியும் கெஞ்சியுள்ளார்.

"ரூ.18 லட்சம் வேண்டும்.."

அதற்கு எதிர்முனையில் பேசிய நபர், தான் சொல்லும் வங்கிக் கணக்குக்கு ரூ. 18 லட்சம் செலுத்தினால், அந்தப் பெண் கொடுத்த புகாரை கிழித்து போட்டு விடுவதாக கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, தனது சேமிப்பில் இருந்து ரூ. 18 லட்சத்தை எடுத்து, அவர் கூறிய வங்கிக் கணக்கில் கெளரவ் செலுத்தியுள்ளார். "சரி., சேமிப்பு பணம் போனாலும் பரவாயவில்லை; தன் குடும்ப மானம் கப்பல் ஏறாமல் காப்பாற்றி விட்டோம்" என்ற மன நிம்மதியில் அவர் இருந்துள்ளார்.

மோசடி - புகார்..

மோசடி - புகார்..

ஆனால், மறுபடியும் கெளரவை தொடர்புகொண்ட அந்த நபர், உயரதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டியிருப்பதால் மேலும் ரூ. 2 லட்சத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கெளரவ், இதுகுறித்து பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், அவர் கூறிய பெயரில் டெல்லி சைபர் செல்லில் யாரும் இல்லை என்றும், இது மோசடி கும்பலின் வேலை எனவும் தெரியவந்தது. இதையடுத்து, கெளரவ் அளித்த புகாரின் பேரில், ரூ.18 லட்சத்தை மோசடி செய்த கும்பலை தேடி வருகின்றனர். சபல புத்தியால் தனது சேமிப்புப் பணம் மொத்தத்தையும் இழக்க வேண்டிய சூழலுக்கு கெளரவ் தள்ளப்பட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+