டிரம்ப்பின் உண்மையான விசுவாசியை களமிறக்கிய இந்திய ராணுவம்! சீனாவுக்கு இனி சிக்கல்தான்!
மும்பை: 77வது ராணுவ தினத்தை ஒட்டி, நேற்று புனேவில் இந்திய ராணுவத்தின் பலத்தை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் ரோபோ நாய்கள் பங்கேற்றிருந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
டொனால்ட் டிரம்பின் வீட்டை பாதுகாக்கும் பணியில் இந்த ரோபோ நாய்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அந்த அளவுக்கு மிகவும் நம்பிக்கை வாய்ந்ததாக கருதப்படும் இந்த ரோபோ நாய்கள், இந்திய ராணுவத்தில் இணைந்திருப்பது சீனாவின் கண்களை உறுத்தி வருகிறது.

இந்திய ராணுவத்தில் ரோபோ நாய்கள்:
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்த ஆண்டு ராணுவ தினத்திற்கான அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் ராணுவ வீரர்கள் மிடுக்காக அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பின் ஒரு பகுதியாக, ரோபோ நாய்கள் இருந்தன. இப்படியான அணிவகுப்பில் ரோபோ நாய்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. ARCV எனும் நிறுவனத்தின் துணை நிறுவனமான 'ஏரோ ஆர்க்' எனும் நிறுவனம்தான் இந்த ரோபோக்களை தயாரித்திருக்கிறது. இதற்கு 'ARCV MULE' என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.
ARCV நிறுவனம் இந்திய ராணுவத்திற்கு பல முக்கிய உபகரணங்களையும், தளவாடங்களையும் தயாரித்து வழங்கி வருகிறது. குறிப்பாக ராணுவ பீரங்கி டாங்கிகளை தயாரிப்பதில் இந்த நிறுவனம் அனுபவம் கொண்டிருக்கிறது.
வலிமையடையும் இந்திய ராணுவம்:
ஏற்கெனவே இந்திய ராணுவம் வசம் பல்வேறு நவீன கருவிகளும், ஆயுதங்களும் இருக்கின்றன. அந்த வகையில், தற்போது ரோபோ நாய்களை அறிமுகம் செய்திருப்பது ராணுவம் நவீனமயமாகியிருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறது. அடிக்கடி நடத்தப்படும் ஏவுகணை சோதனைகள், அதனை தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் அதிநவீன போர் விமானங்கள் என, இந்தியா மாஸ் காட்டி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ரோபா நாய்களும் இணைந்திருக்கின்றன.
ரோபோ நாய்கள் என்னென்ன செய்யும்?:
பல்வேறு நோக்கங்களுக்காக இவை உருவாக்கப்பட்டிருந்தாலும், இதன் பிரதான நோக்கம் உளவுதான். போர் முனையில் ராணுவ வீரர்களுக்காக இந்த நாய்கள் உளவு பார்த்து சொல்லும். இரண்டு சென்சார்கள், ஒரு பேட்டரி மூலம் இது இயங்குகிறது. இதை கொஞ்சம் தொலைவிலிருந்து இயக்க முடியும். அல்லது தன்னிச்சையாகவும் இது இயங்கும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுமார் 100 ரோபோ நாய்களை இந்திய ராணுவம் வாங்கியிருக்கிறது.
இந்த நாய்கள் செங்குத்தான பகுதிகளிலும், கல்லு முள்ளு இருக்கும் பகுதியிலும் கூட ரொம்ப ஈஸியாக போய்விடும். மிகவும் குளிர் நிறைந்த பகுதி மற்றும் மிகவும் வெப்பம் நிறைந்த பகுதியிலும் இதனால் சிறப்பாக செயல்பட முடியும். அதிகபட்சமாக மைனஸ் -40°C முதல் +55°C வரை இந்த நாய்கள் வேலை செய்யும்.
- எடை: 51 கிலோ
- பாதுகாப்பு மதிப்பீடு: IP67 (நீர் புகாதவாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது)
- இயக்க வெப்பநிலை: -45°C முதல் 55°C வரை
- உயர் வேகம்: வினாடிக்கு 3 மீட்டர்
- பேட்டரி ஆயுள்: 20 மணி நேரம்
இந்த ரோபோவில் வெப்பநிலை கண்காணிப்பு மற்றும் நைட் விஷன் கேமராக்களும் இருக்கிறது. மட்டுமல்லாது இதனால் அதிகபட்சமாக 12 கி.கி எடை கொண்ட பொருளை தூக்கிக்கொண்டு வர முடியும்.
சீனாவுக்கு சிக்கல்:
இந்த மாதிரியான, நவீன தொழில்நுட்பம் கொண்ட ரோபோ நாய்கள் ராணுவத்தில் இருப்பது சீனாவுக்குதான் தலைவலி. ஏனெனில், கிழக்கு லடாக்கில் சீனா புதிய ஆக்கிரமிப்புகளை செயல்படுத்த தொடங்கியிருக்கிறது. இதற்கு எதிராக இந்திய ராணுவம் சில திட்டங்களை வகுத்திருக்கிறது. இந்த திட்டத்திற்கு ரோபோ நாய்களை பயன்படுத்தினால் அது, சீனாவுக்கு தொந்தரவுதான். ரோபோ நாய்களை பயன்படுத்தி உளவு பார்ப்பதன் மூலம் சீனாவின் செயல் திட்டத்தை இந்தியா முன்கூட்டியே தெரிந்து முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications