ஓடும் ரயிலில் 4 பேர் சுட்டுக்கொலை.. வெறிச்செயலில் ஈடுபட்ட சேத்தன் சிங் மனநலம் பாதித்தவரா? பின்னணி
மும்பை: ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே போலீஸ் அதிகாரி உள்பட 4 பேரை ரயில்வ போலீஸ்கார் சேத்தன் சிங் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் துப்பாக்கியால் சுட்ட ரயில்வே போலீஸ்காரர் சேத்தன் சிங் மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்ட ரயில் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தபோது அதிகாலை நேற்று முன்தினம் அதிகாலை 2.53 மணிக்கு திடீரென்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.

இந்த ரயிலில் ரயில்வே உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகாராம் மீனா தலைமையில் ரயில்வே போலீஸ்காரர்களான சேத்தன் சிங் (வயது 33), நரேந்திர பார்மர், அமே ஆச்சர்யா ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இவர்கள் சூரத்தில் இருந்து ரயில் ஏறி பாதுகாப்பு பணியை தொடங்கினர்.
குஜராத் மாநிலம் பால்கர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று துப்பாக்கியை எடுத்த சேத்தன் சிங், உதவி சப் இன்ஸ்பெக்டர் திகாராம் மீனா, அஜ்கர் அப்பாஸ் ஷேக் (48), அப்துல் காதர்பாய் முகமது ஹுசைன் பன்புர்வாலா (62) உள்பட 3 பேரையும் சுட்டு கொன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரயில்வே போலீஸ் சேத்தன் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியில் மதம்சார்ந்த மோதல் இருப்பதாக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் தான் துப்பாக்கியால் சுட்டு 4 பேரை கொன்ற ரயில்வே போலீஸ் சேத்தன் சிங்கிற்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி சேத்தன் சிங்கிற்கு மனநல பிரச்சனை உள்ளதா? என்பதை கண்டறிய அவர் மனநல மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது போலீஸ் விசாரணையில் சில முக்கிய தகவல்களும் வெளியாகி உள்ளன.
அதாவது சம்பவம் நடந்த நாளில் சேத்தன் சிங் விடுமுறை கேட்டுள்ளார். உதவி சப் இன்ஸ்பெக்டர் திகாராமிடம் தனக்கும் உடல்நலம் சரியில்லை. தன்னை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து ஓய்வு எடுக்கும்படி கூறிய நிலையில் அவர் சிறிது நேரத்தில் நலமாக இருப்பதாக கூறி பணியை தொடர்ந்த நிலையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications