ரூ.17.5 கோடி புதிய வீடு! வாயை பிளக்க வைத்த நடிகர் மாதவன்
மும்பை: நடிகர் மாதவன் மும்பையில் ரூ.17.5 கோடி பட்ஜெட்டில் ஒரு ஆடம்பரமான வீடு ஒன்றை வாங்கியுள்ளார் என்று தகவல் இப்போது பாலிவுட் சினிமா வட்டாரங்களில் முக்கிய செய்தியாக வலம்வரத் தொடங்கி இருக்கிறது.
சாக்லெட் பாய் என்ற அடைமொழியுடன் வலம் மாதவனை 'அலைபாயுதே' மூலம் இயக்குநர் மணிரத்னத்தால் நடிகராக அறிமுகமானார். அதற்கு முன்பே இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்த மாதவன் தமிழ்த் திரை ரசிகர்களுக்கு 2000 ஆம் ஆண்டுதான் இவர் அறிமுகமானார். இவர் ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷத்பூரில் பிறந்தவர்.

'மின்னலே', 'கன்னத்தில் முத்தமிட்டால்'. 'ரன்' , 'அன்பே சிவம்', 'விக்ரம் வேதா', 'இறுதிச் சுற்று' என ஏகப்பட்ட வெற்றி படங்களில் நடித்த மாதவன், 'ராகெட்ரி: நம்பி எஃபெக்ட்' மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். தமிழ் சினிமாவில் பிசியாக இருந்தபோதும்கூட இவர் மும்பை நகரத்தில்தான் வசித்து வந்தார். அதற்குக் காரணம், அவர் பாலிவுட் படங்களிலும் நடித்து வந்ததுதான்.
ஆகவே மும்பையில் உள்ள மிகப் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றில் வசித்து வந்தார். அந்த வீட்டின் புகைப்படங்களை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்துள்ளார். அங்கே அமைக்கப்பட்டுள்ள மாடித் தோட்டங்களைப் பற்றி கூட அவர் வீடியோக்கள் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் குடியிருப்பில் மாதவன் ரூ.17.5 கோடியில் ஒரு ஆடம்பரமான வீட்டை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாந்த்ரா குர்லா வளாகம் இந்தியாவின் மும்பை நகரத்தில் உள்ள ஒரு மத்திய வணிக மாவட்டமாகும். இந்த சொத்து சிக்னியா பேர்ல் அருகே அமைந்துள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வீடு அதிநவீன வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது.
இந்த வீட்டில் உள்ள வசதிகள் என்ன? அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்பது பற்றி SquareYards விர்ச்சுவல் வீடியோவை வெளியிட்டுள்ளது. அபார்ட்மெண்ட் தோராயமாக 389 சதுர மீட்டர் (4.182 சதுர அடி) மற்றும் இரண்டு கார் பார்க்கிங் வசதிகளைக் கொண்டுள்ளது. இந்தக் குடியிருப்பு வளாகத்தில் நீச்சல் குளம், பில்லியர்ட்ஸ் ஆகிய பல விளையாட்டுகளை ஆடுவதற்கான வசதிகள் உள்ளன.

இந்த சிக்னியா பேர்ல் 4 மற்றும் 5 பிஹெச்கே அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குப் பெயர் பெற்றது. சுருக்கமாகச் சொல்லப் போனால், இது விவிஐபிகளின் சொர்க்க புரி. மாதவன் தனது புதிய வீட்டை ஜூலை 22ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். இந்தப் பத்திரப்பதிவுக்கு முத்திரைத் தாள் மட்டும் ரூ.1.05 கோடி ஆகியுள்ளது. கூடவே பதிவுக் கட்டணம் ரூ.30,000 ஆகியுள்ளது.
மும்பை நகரத்தில் உள்ள மிகவும் மதிப்புமிக்க பகுதிதான் இந்த பிகேசி. அதாவது பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ். அழகான கடற்கரை பகுதியான இங்கேதான் பாலிவுட் நடிகர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக பாந்த்ராவில்தன் ஷாருக்கான் உள்ளார். தாஜ் ஹோட்டல் கூட ஒன்று உள்ளது. பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில் ஒருவர் வீடு வாங்கினாலே மும்பை ஊடகங்களில் அது செய்தியா விடும்.
சமீபத்தில் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படத்தை இயக்கி நடித்த மாதவன், எஸ். சஷிகாந்தின் முதல் படமான தி டெஸ்ட் படத்தில் நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். இது ஒரு ஸ்போர்ட்ஸ் மூவி. அதற்காக தனது உடல் எடையை அவர் இயற்கையாகவே எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் உணவுக்கட்டுப்பாடு மூலம் குறைத்துள்ளார்.

இது இல்லாமல் மெட்லான் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கி வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. அது ஒரு கும்பக் கதை.
மேலும் ராஜேஷ் டச்ரிவரின் செம்பகராமன் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு பயோபிக் எடுக்க உள்ளார். அதில் கதாநாயகனாக மாதவன் நடிக்க உள்ளார். கரண் சிங் தியாகியின் சி சங்கரன் நாயரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் துணை வேடத்திலும் நடிக்க உள்ளார். சங்கரன் நாயரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் துணை வேடத்திலும் நடிக்க உள்ளார். கூடவே மேலும் ஸ்வாதி சிங்காவின் இயக்க உள்ள 'ஜி' என்ற அறிவியல் புனைகதை படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் மாதவன்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications