Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மும்பையில் கோடிகளில் சொத்து வாங்கி குவிக்கும் பிச்சைக்காரர்.. எவ்வளவுன்னு கேட்டால் தலையே சுற்றிடும்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் பிச்சை எடுத்து வரும் பிச்சைக்காரர் ஒருவருக்கு ரூ.7.5 கோடி சொத்து இருக்கிறது. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக ஒரு வீடும், இரண்டு கடைகளும் வைத்திருக்கிறாராம். இருந்தாலும் இப்போதும் அவர் பிச்சை தான் எடுத்து வருகிறாராம். ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கே பலரும் தினமும் மாடாய் உழைத்து பாடாய் படும் வேளையில், ஒரு பிச்சைக்காரர் எப்படி 7.5 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பார் என்று யோசிக்க தோன்றுகிறதா?..

சாப்பாடுக்கு வழியில்லாததாலும், உழைக்க முடியாததாலும் சிலர் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார்கள். கோவில்கள், பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்களில் பிச்சைக்காரர்கள் பிச்சை எடுத்து வருகிறார்கள். இந்த பிச்சைக்காரர்களை எல்லாம் நாம் பார்க்கும் போது ஒரு வித வருத்தம் தோன்றும்.

beggar mumbai weird

ஆனால் இதற்கு எல்லாம் மாறாக, பொறாமைப்படும் வகையில் சில் பிச்சைக்காரர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா.. ஆம் மும்பையில் கோடி கோடியாய் சொத்து சேர்த்திருக்கிறார் கோடீஸ்வர பிச்சைக்காரர். பிச்சை எடுத்தே அவர் 7.5 கோடிக்கு சொத்து சேர்த்திருக்கிறாராம். அட என்னங்க சொல்றீங்க என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

ஆம்.. மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல் அருகே பிச்சை எடுத்து வரும் பிச்சைக்காரர் பாரத் ஜெயின் என்பவருக்கு ரூ.7.5 கோடி சொத்து இருக்கிறது. ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கே பலரும் தினமும் மாடாய் உழைத்து பாடாய் படுகிறார்கள். அப்படி இருக்கையில் ஒரு பிச்சைக்காரர் எப்படி 7.5 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பார் என்று யோசிக்க தோன்றுகிறதா?..

இந்த சொத்தை சேர்ப்பதற்கு அவர் வேறு வேலைக்கு எங்கும் போகவில்லை. அதேபோல் அவருக்கு லாட்டரி எதுவும் அடிக்கவில்லை. பிச்சை எடுத்தே தான் அவர் இந்த சொத்தை சேர்த்திருக்கிறாராம். அதுமட்டுமின்றி பிச்சை எடுத்து வந்த பணத்தில் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். அவரது மனைவி அங்கு தான் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளும் மும்பையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்களாம்.

இப்படி பலரின் பொறாமைக்கு உள்ளான அந்த பிச்சைக்காரர் தினமும் 12 மணி நேரம் தான் பிச்சை எடுப்பாராம். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் தான் பிறந்தவராம். மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல் அருகே தான் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிச்சை எடுத்து வருகிறாராம். ஒரு நாளைக்கு மட்டும் பிச்சை எடுப்பதனால் ரூ.2000 முதல் ரூ.2,500 வரை சம்பாதிப்பாராம்.

சுமார் மாதத்திற்கு மட்டும் ரூ.60,000 முதல் 75,000 ரூயாய் சம்பாதிப்பாராம். மாதம் ரூ.75000 சம்பாதித்தாலும், ஒரு ரூபாய் பிச்சை போட்டாலும் முகத்தில் எந்த வித ரியாக்சனும் காட்டாமல் சிரித்துக்கொண்டே பெற்றுக்கொள்வாராம். இப்படி பிச்சை எடுத்த காசில் தான் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியிருக்கிறார். மேலும் 2 கடைகளும் சொந்தமாக வைத்துள்ளார்.

இந்த 2 கடைகளையும் வாடகைக்கு விட்டு அதில் இருந்தும் மாதம் ரூ.30,000 சம்பாதித்து வருகிறாராம். தற்போது இவரது சொத்து 7.5 கோடியாக உள்ளதாம். இவரது குடும்பத்தினர், இனிமேல் நீங்கள் பிச்சை எடுக்க வேண்டாம் என்று கூறிய பிறகும் இவர் பிச்சை எடுப்பதை நிறுத்தாமல், தொடர்ந்து பிச்சை எடுத்து வருகிறாராம். இது பற்றி பாரத் ஜெயின் கூறியதாவது:-

"நான் பேராசை படுவதில்லை. தாராளமாக வாழ்கிறேன். கோயில்களுக்கு கூட நன்கொடை கொடுத்து வருகிறேன். என்னுடையை இந்த செய்தியை படித்தவுடன் உங்களுக்கும் பிச்சை எடுக்கும் எண்ணம் தோன்றும். ஆனால் அது அவ்வளவு சுலபம் கிடையாது" என்று கூறினார்.

இந்தியாவில் பிச்சை எடுக்கும் தொழிலில் மட்டும் ஒரு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி புரள்கிறதாம். பாரத் ஜெயினுக்கு 7.50 கோடி சொத்தும், மும்பையை சேர்ந்த மற்றொரு பிச்சைக்காரர் சம்பாஜி காலே என்பவருக்கு 1.50 கோடி சொத்தும், லட்சுமி தாஸ் என்ற பிச்சைக்காரருக்கு ரூ.1 கோடி சொத்தும் இருக்கிறதாம்.

தற்போதைய நவீன காலக்கட்டத்தில் கூட இன்னும் வேலை தேடியும், சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையோடும் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டி நினைத்தும் பலரும் ஓட்டமாய் ஓடி வருகிறார்கள். ஒரு சிலரோ தினமும் உழைத்தும் கூட அன்றாட வாழ்க்கையை கடன் இல்லாமல் வாழ முடியவில்லையே என்றும் புலம்புவதுண்டு. இது யாதார்த்தம் தான். எனினும் உழைத்தால் நிச்சயம் வெற்றியுண்டு!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+