"கைரேகை செட் ஆகல.." சைஃப் அலி கான் தாக்குதலில் பெரிய ட்விஸ்ட்! குழம்பி நிற்கும் மும்பை போலீஸ்
மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்திக்குத்துத் தாக்குதல் நடந்தது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் ஷரிபுல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே ஷரிபுலின் கைரேகையும் சம்பவம் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட கைரேகையும் பொருந்திப் போகவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சைஃப் அலி கான் வீட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம நபர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் ஒருவரைக் கைது செய்திருந்தனர்.

சைஃப் அலி கான் :
இதற்கிடையே சைஃப் அலி கான் வழக்கில் இப்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது சைஃப் அலி கான் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து மொத்தம் 19 செட் கைரேகைகளை போலீசார் சேகரித்துள்ளனர். இருப்பினும், அதில் எந்தவொரு கைரேகையுடனும், குற்றஞ்சாட்டப்பட்ட ஷரிபுல் இஸ்லாமின் கைரேகைகள் பொருந்தவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ட்விஸ்ட்:
சைஃப் அலி கானின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கைரேகைகளை மாநில குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) கைரேகை பிரிவுக்கு போலீசார் அனுப்பியுள்ளனர். அதை இப்போது குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகியுள்ள ஷரிபுல் இஸ்லாமினின் கைரேகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லியுள்ளனர். இருப்பினும், சோதனையின் முடிவில் ஷரிபுல் இஸ்லாமின் கைரேகை அங்குச் சேகரிக்கப்பட்ட கைரேகை உடன் பொருந்தவில்லை என்பது தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கூடுதல் மாதிரிகளை மீண்டு ஒருமுறை சோதனைக்கு அனுப்ப மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
என்ன நடந்தது:
கடந்த ஜனவரி 15ம் தேதி சைஃப் அலி கானின் வீட்டிற்குள் ஊடுருவிய மர்ம நபர் அங்குக் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது அவரை சைஃப் அலி கான் தடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் சைஃப் அலி கானை கொள்ளையன் சரமாரியாகக் கத்தியால் குத்தவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதில் சைஃப் அலி கானுக்கு மொத்தம் ஆறு இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. அதில் இரு காயங்கள் ஆழமாக ஏற்பட்ட நிலையில், ஒன்று முதுகுத் தண்டிற்கு மிக அருகே ஏற்பட்டுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த சைஃப் அலி கான் லீலாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இரண்டு ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. முதுகுத்தண்டிற்கு அருகே ஏற்பட்ட காயத்தால் முதுகுத்தண்டில் இருந்து திரவம் கசிந்துள்ளது. இதைத் தடுக்கவும் ஆபரேஷன் செய்யப்பட்டது.
போலீஸ் சொல்வது என்ன
சுமார் ஆறு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த சைஃப் அலி கான் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சைஃப் அலி கானை குத்தியதாக ஷரிபுல் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த ஷரிபுல் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார் என்றும் கூறப்படுகிறது. பணம் கொடுத்தால் போலியாகக் குடியுரிமை ஆவணங்களைத் தயார் செய்து தருவதாகச் சிலர் சொன்னதாகவும் இதன் காரணமாகவே அவர் சைஃப் அலி கான் வீட்டில் திருட முயன்றதாகவும் போலீசார் தரப்பில் கூறினர்.
இந்தச் சூழலில் தான் குற்றம் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட கைரேகையுடன் ஷரிபுல் இஸ்லாமின் கைரேகைகள் பொருந்தவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஷரிபுல் இஸ்லாமினின் தந்தையும் கூட தனது மகனுக்கு இதில் தொடர்பு இல்லை என்றும் சிசிடிவி கேமராவில் இருக்கும் நபர் தனது மகன் இல்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications