ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சைஃப் அலி கான்! நள்ளிரவில் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கூட்டி சென்ற மகன்

Subscribe to Oneindia Tamil

மும்பை: நள்ளிரவில் சைஃப் அலி கான் வீட்டில் புகுந்த மர்ம நபர் அவரை சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த சைஃப் அலி கான் ஆட்டோவிலேயே மருத்துவமனைக்குச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

சைஃப் அலி கான் வீட்டில் நள்ளிரவில் நடந்த தாக்குதல் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்குப் பிறகு என்ன நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

saif ali khan bollywood mumbai

ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்:

ஆறு இடங்களில் கத்திக்குத்து விழுந்ததால் சைஃப் அலி கான் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். ரத்தம் கேட்டு சைஃப் அலி கானின் மூத்த மகன் இப்ராஹிம் வெளியே ஓடி வந்து பார்த்துள்ளார். பிறகு ரத்த வெள்ளத்தில் இருந்த தனது தந்தையை இப்ராஹிம் தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அதிலும் வீட்டில் ஏகப்பட்ட கார்கள் இருந்தாலும் அது எதுவும் தயாராக இல்லையாம். கார் ரெடியாகும் வரை எல்லாம் காத்திருக்க முடியாது என்பதை உணர்ந்த இப்ராஹிம் தனது தந்தையை ஆட்டோ மூலமாகவே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்டார்:

23 வயதான இப்ராஹிம் நள்ளிரவு நேரத்தில் சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சைஃப் அலி கானில் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மருத்துவமனை இருந்த சூழலில், ஆட்டோவிலேயே சைஃப் அலி கான் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி வீடியோவும் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

நேற்றிரவு வீட்டில் ஊடுருவிய நபர் உடன் நடந்த சண்டையில் சைஃப் அலி கானுக்கு ஆறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் இரண்டு காயங்கள் ஆழமாக இருந்ததாகவும் குறிப்பாக ஒன்று முதுகுத் தண்டிற்கு மிக அருகில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சைஃப் அலி கானுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட சூழலில், அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை:

போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சிசிடிவி கேமரா மற்றும் செக்யூரிட்டியை தாண்டி அந்த நபர் சைஃப் அலி கான் வீட்டில் நுழைந்தது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். ஏனென்றால் சிசிடிவி கேமராவில் சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வரை யாரும் நுழைந்தது பதிவாகவில்லை. இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழப்பம்

சைஃப் அலி கானின் டீம் வெளியிட்ட அறிக்கையில் இது கொள்ளை முயற்சி என்றும் அதைத் தடுக்க முயன்ற போதே காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், போலீசார் தாக்குதல் நடத்திய அந்த நபரை ஊடுருவல்காரர் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். கொள்ளை முயற்சி என்றோ கொள்ளையன் என்றோ எதுவும் போலீசார் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சைஃப் அலி கான் வீட்டில் வேலை செய்து வரும் ஊழியரே அந்த நபரை உள்ளே வீட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக வீட்டில் வேலை செய்து வரும் ஒருவரிடம் போலீசார் இப்போது விசாரணை செய்து வருகிறார்கள். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், பல ஷாக் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+