நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது.. போலீசை ஏமாற்ற முயன்றது அம்பலம்.. என்ன நடந்தது?
மும்பை: மும்பையில் உள்ள வீட்டுக்குள் நுழைந்து நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய வழக்கில் தப்பி சென்ற நபரை போலீசார் தானேவில் இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்துள்ளனர். அப்போது அவர் போலீசை ஏமாற்ற முயன்றது அம்பலமாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் பல பிரபலங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ‛சத்குரு சரண்' என்ற பெயரில் உள்ள 12 மாடிகள் கொண்ட குடியிருப்பில் நடிகர் சைஃப் அலிகான் 4வது மாடியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தான் கடந்த 16ம் தேதி அதிகாலையில் நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்த நபர் கத்தியால் குத்திவிட்டு ஓடியுள்ளார். சைஃப் அலிகான் வீட்டில் கொள்ளையடிக்க அந்த நபர் முயன்றுள்ளார். சைஃப் அலிகான் அந்த நபரை பிடித்தபோது கத்தியால் குத்திவிட்டு ஓடியது தெரியவந்துள்ளது.
மர்மநபர் கத்தியால் குத்தியதில் நடிகர் சைஃப் அலிகானின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. மொத்தம் 6 முறை அவரை மர்மநபர் கத்தியால் குத்தி உள்ளார். குறிப்பாக முதுகு பகுதியில் சைஃப் அலிகானுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதோடு பாதி கத்தி உடைந்து அவரது உடலில் இருந்தது.
இதையடுத்து சைஃப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கை, கழுத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முதுகில் குத்தியபடி இருந்த கத்தி அகற்றப்பட்டது. தற்போது அவர் மெல்ல உடல்நலம் தேறி வருகிறார். டாக்டர்கள் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தம் 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். இதற்கிடையே தான் சைஃப் அலிகான் கத்தியால் குத்திய நபர் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் நடந்து செல்லும் வீடியோ வெளியானது.
அதனடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த பின் 3 நாட்கள் கழித்து அவர் மும்பை போலீசாரிடம் இன்று அதிகாலையில் தானேவில் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரது பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் செஷாத் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்
மேலும் அவர் போலீசாரை ஏமாற்ற முயன்றுள்ளார். அதாவது போலீசாரிடம் அவர் சிக்கிய பிறகு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வேளையில் அவர் தனது பெயரை மாற்றி மாற்றி கூறியுள்ளார். முதலில் பிஜோய் தாஸ் என்று தெரிவித்துள்ளார். அதன்பிறகு தனது பெயரை முகமது சஜித் என்று கூறியுள்ளார். இறுதியாக விஜய் தாஸ் என்று தெரிவித்துள்ளார். இதில் அவரது பெயர் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரித்த நிலையில் அவர் வைத்திருந்த ஆவணங்களின்படி அவரது பெயர்
முகமது ஷரிபுல் இஸ்லாம் செஷாத் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதோடு தற்போது கைதான நபர் ரெஸ்டாரண்ட்டில் வெயிட்டர் உள்பட பல வேலைகளை செய்துள்ளார். முன்னதாக நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் தொடர்புடையவர் என்று சந்தேகப்பட்டு நேற்று சத்தீஸ்கர் துர்க் ரயில் நிலையத்தில் ஒருவரை ரயில்வே போலீசார் பிடித்தனர். மும்பை எல்டிடி பகுதியில் இருந்து கொல்கத்தா சாலிமர் செல்லும் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது அவர் சிக்கினார்.
அந்த நபரின் பெயர் ஆகாஷ் கைலாஷ் கனோஜியா (வயது 31) என்பது தெரியவந்தது. இவர் தான் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக தகவல்கள் பரவியது. ஆனால் போலீசார் அவரது கைதை உறுதி செய்யவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் தான் ஆகாஷ் கைலாஷ் கனோஜியாவிடம் விசாரிக்கப்படுகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தான் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications