Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சல்மான் அடுத்தமுறை காரில் ஏறும்போது.. வெடித்து சிதறும்.." பகீர் கொலை மிரட்டல்! என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் பிரபலமான சல்மான் கானுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து கொலை மிரட்டல் வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இப்போது மீண்டும் அவருக்குப் புதிய கொலை மிரட்டல் வந்துள்ளது. அவரது காரை வெடிகுண்டு வைத்துச் சிதறடிக்கப் போவதாகக் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பாலிவுட்டில் இருக்கும் மூத்த நடிகர்களில் ஒருவர் சல்மான். கடந்த சில ஆண்டுகளாகவே இவர் சினிமாவில் ஹிட் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். அதேநேரம் பர்சனல் வாழ்க்கையிலும் தொடர்ச்சியாக வரும் கொலை மிரட்டல்களால் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்.

Salman Khan Receives Fresh Death Threat from Lawrence Bishnoi Gang

சல்மான் கான்

இதற்கிடையே பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இப்போது கொலை மிரட்டல் வந்துள்ளது. கடந்தாண்டு கிட்டதட்ட இதே காலகட்டத்தில் தான் சல்மான் கானின் பாந்த்ரா வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த நிலையில், இப்போது ஓராண்டில் மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பையின் வோர்லியில் உள்ள போக்குவரத்துத் துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சல்மான் கானின் வீட்டிற்குள் நுழைந்து அவரை கொல்லப்போவதாகவும் அவரது காரில் குண்டு வைக்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வோர்லி போலீசார் கொலை மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே கொலை மிரட்டல் விடுத்தது யார்.. இதன் பின்னணி குறித்து அதிகாரிகள் இப்போது விசாரித்து வருகின்றனர்.

என்ன பிரச்சினை

கடந்த சில ஆண்டுகளாகவே லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சல்மான் கானுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல்களை விடுத்து வருகிறது. 1998ஆம் ஆண்டு நடந்த மான் வேட்டை வழக்கில் சல்மான் கானுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அந்தக் கும்பல் அவரை குறிவைத்து வருகிறது. சல்மான் கான் வேட்டையாடியதாகக் கூறப்படும் கலைமானை (blackbucks) பிஷ்னோய் சமூகத்தினர் கடவுளுக்கு இணையாகக் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே பிஷ்னாய் கேங் சல்மான் கானை குறிவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடரும் கொலை மிரட்டல்கள்

2024 ஆம் ஆண்டில் சல்மான் கானுக்கு இதேபோல பிஷ்னோய் கும்பலிடமிருந்து புதிய மிரட்டல் வந்தது. அதில் பிஷ்னோய் சமூகத்தினரின் குல தெய்வ கோயிலுக்கு நேரடியாகச் சென்று சல்மான் கான் மானை கொன்றதற்குப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. தொடர்ந்து சல்மான் கானுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டே இருந்தது.

இதுபோல கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக சல்மான் கானுக்கு மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது. இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே சல்மான் கானுக்கு ஒய்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவரது படப்பிடிப்புத் தளங்களிலும் கூட பல்வேறு சோதனைகளுக்கு பிறகே ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சல்மான் கான்

இதுபோல மிரட்டல்கள் அதிகரித்துள்ளது குறித்துப் பேசிய சல்மான் கான், "கடவுளும் அல்லாவும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு விதி எவ்வளவு இருக்கிறதோ.. அதுவரை நான் இருப்பேன் அவ்வளவுதான்.. நான் பிரஸ் உடன் இருக்கும்போது கவலைப்படுவதில்லை. ஆனால் பிரஸ் இல்லாமல் போனால் எனக்குப் பல கட்டுப்பாடுகள் இருக்கும். இப்போதெல்லாம் நான் வீட்டில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்.. அங்கிருந்து வீட்டிற்கு மட்டுமே செல்கிறேன். வேறு எங்கும் செல்வது இல்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+