"தப்பு பண்ணிட்டேன்.." சல்மான் கானுக்கு வந்த மிரட்டல்.. இரண்டே நாளில் மொத்தமாக மாறிய சீன்.. என்னாச்சு
மும்பை: சல்மான் கானை தொடர்ந்து குறிவைத்து லாரன்ஸ் பிஷ்னோய் கேங் கொலை மிரட்டல் கொடுத்து வருகிறது. இதற்கிடையே இரு தரப்பிற்கும் இடையே உள்ள பகையைத் தான் முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் அதற்கு சல்மான் கான் ரூ.5 கோடி தர வேண்டும் என்றும் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கிடையே அதே நபர் இப்போது தான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக மற்றொரு மெசேஜ் அனுப்பி உள்ளது பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை நடந்த ஒரு படுகொலை நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது என்சிபி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பாபா சித்திக் என்பவர் மும்பையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

அதுவும் அவர் தனது மகனின் எம்எல்ஏ அலுவலகத்திற்குச் சென்றிருந்த நிலையில், அங்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிஷ்னோய் கேங்: பாபா சித்திக் மரணத்திற்கு பிஷ்னோய் கேங் பொறுப்பேற்றுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் உடன் நெருங்கிய நட்பில் இருந்ததற்காகவே பாபா சித்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது கடந்த 1990களின் இறுதியில் ராஜஸ்தானில் கலைமான் ஒன்றை சல்மான் கான் வேட்டையாடியதாகக் கூறப்படுகிறது. கலைமான்களை பிஷ்னோய் சமூகத்தினர் கடவுளாகக் கருதுவார்கள். இதுவே இரு தரப்புக்கும் உள்ள பகைக்கு முக்கிய காரணமாகும்.
தனது சகோதரர்களில் ஒருவரை (கலைமான்) கொன்ற சல்மான் கானை நிச்சயம் பழிவாங்குவோம் என்று பிஷ்னோய் கேங் எச்சரித்தது. மேலும், சல்மான் கானுக்கு யார் உதவினாலும் அவர்களும் பதில் சொல்ல வேண்டும் என மிரட்டல் விடுத்தது. இந்தச் சூழலில் தான் கடந்த அக். 18ம் தேதி மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ்அப் நம்பருக்கு ஒரு மெசேஜ் வந்தது.
முதலில் வந்த மிரட்டல்: அதில் லாரன்ஸ் பிஷ்னாய் கேங் உடன் இருக்கும் பகையை முடிவுக்குக் கொண்டு வர சல்மான் கான் ரூ 5 கோடி தர வேண்டும் என்றும் அப்படித் தரவில்லை என்றால் பாபா சித்திக்கிற்கு ஏற்பட்ட நிலையே சல்மான் கானுக்கும் ஏற்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
அதில் மேலும், "இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். சல்மான் உயிருடன் இருக்க வேண்டும்... லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் ₹ 5 கோடி கொடுக்க வேண்டும். பணம் தராவிட்டால் பாபா சித்திக் நிலையை விட சல்மானின் நிலை மோசமாகிவிடும்" என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
அடுத்து வந்த மன்னிப்பு: இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மும்பை பாந்த்ராவில் உள்ள சல்மான் கானில் வீடு, மும்பை பன்வெல்லில் உள்ள அவரது பண்ணை வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்தச் சூழலில் மீண்டும் அதே நம்பரில் இருந்து போலீசாருக்கு மற்றொரு மெசேஜ் வந்துள்ளது. அதாவது சல்மான் கானை மிரட்டியதற்கு மன்னிப்பு கேட்டு அந்த மெசேஜ் வந்துள்ளது. மேலும், கொலை மிரட்டல் கொடுத்து மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாகவும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.
பின்னணி: அதாவது முதலாவது மெசேஜ் வந்த உடனேயே மகாராஷ்டிரா போலீசார் அந்த நம்பரை டிராக் செய்யத் தொடங்கியுள்ளனர். அது ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்ததைக் கண்டறிந்த அவர்கள், யார் அந்த மெசேஜை அனுப்பினார் என்பதையும் கண்டுபிடித்துவிட்டனர். மேலும், அவரை பிடிக்க மும்பையிலிருந்து ஒரு போலீஸ் குழு ஜார்கண்ட் சென்றுள்ளது. இந்த நேரத்தில் தான் மன்னிப்பு மெசேஜ் வந்துள்ளது. அதேநேரம் அவர் பிஷ்னோய் கேங்கை சேர்ந்தவரா.. அவர் எதற்காக சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்த தகவல்களை போலீசார் பகிரவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications