சல்மான் கான் கையை பாருங்க.. அட ராமஜென்ம பூமி வாட்ச்.! விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலையே சுத்துது

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் அணிந்துள்ள வாட்ச் அப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆரஞ்சு கலரில் இருக்கும் இந்த வாட்ச் ராம ஜென்ம பூமி லிமிட்டட் எடிசன் வாட்ச் ஆகும். இதன் சிறப்பம்சம் என்ன.. இந்த வாட்ச்சின் தனித்துவம், விலை என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

சாதாரண மக்களுக்கு வாட்ச் என்பது டைம் பார்க்கும் ஒரு கருவி அவ்வளவு தான்.. ஒரு வாட்ச்சை வாங்கிப்போட்டால் அது ஓடும் வரை பயன்படுத்துவார்கள். ஆனால், பிரபலங்களும் செல்வந்தர்களும் அப்படி இல்லை. வாட்ச்சை ஒரு கலெக்ஷனாகவே பார்ப்பார்கள்.

Salman Khan s Rs 34 Lakh Ram Janmabhoomi Watch Makes a Bold Fashion Statement

சல்மான் கான் வாட்ச்

தேடி தேடி விலை உயர்ந்த வாட்ச்களை வாங்கி பயன்படுத்துவார்கள். குறிப்பாக சினிமா பிரபலங்கள் இதுபோல ஏகப்பட்ட வாட்ச்களை தங்கள் கலெக்ஷனில் வைத்திருப்பார்கள். பொது இடத்தில் அதை அவர்கள் அணிந்து வரும்போது, அது பலரது கவனத்தையும் ஈர்க்கும். அப்படி தான் இப்போது சல்மான் கான் அணிந்துள்ள வாட்ச் அப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அவரது நடிப்பில் சிக்கந்தர் படம் வெளியாகவுள்ள நிலையில், சல்மான் கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில படங்களை வெளியிட்டுள்ளார். அதில் சல்மான் கான் அணிந்துள்ள ஆரஞ்சு கலர் வாட்ச் தான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால் அவர் அணிந்துள்ளது வழக்கமான ரோலக்ஸ் வாட்ச் இல்லை. அது ஜேக்கப் & கோ நிறுவனத்தின் வாட்ச் ஆகும்.

ராம் ஜென்ம பூமி வாட்ச்

அந்த நிறுவனம் எபிக் எக்ஸ் ராம் ஜென்ம பூமி டைட்டானியம் எடிஷனை வெளியிட்டு இருந்த நிலையில், அதைத் தான் இப்போது சல்மான் கான் அணிந்துள்ளார். இந்த வாட்ச்சிந் மதிப்பு சுமார் ரூ.34 லட்சம் என்று சொல்லப்படுகிறது. இது ராம் ஜென்ம பூமி டைட்டானியம் எடிஷன் சீரியஸில் 2ஆவது சீரியஸ் என்றும் தெரிகிறது. இந்த ஜேக்கப் & கோ எபிக் எக்ஸ் ராம் ஜென்ம பூமி எடிசன் 2, எதோஸ் வாட்ச்ஸுடன் இணைந்து உருவாக்கப்பட்டதாகும்.

இது தொடர்பாக எதோஸ் நிறுவனம் கூறுகையில், "இந்த கடிகாரம் அதன் வடிவமைப்பால் மட்டுமல்ல, ராம ஜென்ம பூமியின் கலாச்சார மற்றும் ஆன்மீகத்தைப் பிரதிபலிக்கும் தனித்துவமான டிசைன்களால் வேறுபடுகிறது. இந்த வாட்ச்சில் ராம ஜென்ம பூமி மற்றும் இந்திய வரலாற்றில் ராம ஜென்ம பூமியின் முக்கியத்துவத்தைக் காட்டும் வகையில் சிக்கலான வேலைப்பாடுகள் உள்ளன.

அற்புதமான டிசைன்

வாட்ச்சின் டயலில் ராம ஜென்ம பூமி கோயிலின் சிற்பம் நுட்பமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இது அந்த இடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. கூடுதலாக, டயல் மற்றும் பெசல் ஆகியவற்றில் இந்து கடவுள்கள் பொறிக்கப்பட்டுள்ளது. நவீனத்துவம் மற்றும் வரலாற்றை இணைக்கும் வகையில் இந்த வாட்ச் டிசைன் செய்யப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆரஞ்சு ரப்பர் பட்டை, ஒரு நீலக்கல் கண்ணாடியுடன் வரும் இந்த வாட்ச் லிமிடட் எடிசன் வாட்ச் ஆகும்.

ஜேக்கப் & கோ நிறுவனம் இந்தியாவின் கலாச்சார சின்னங்களைக் கவுரவிக்கும் வகையில் இதற்கு முன்பும் தாஜ்மஹால், இந்தியா கேட், கேட்வே ஆஃப் இந்தியா மற்றும் குதுப் மினார் உள்ளிட்ட வாட்ச் சீரியஸ்களை வெளியிட்டு இருக்கிறது. அதன் வரிசையில் தான் இந்த ராம ஜெமன்பூமி வாட்ச் வெளியிடப்பட்டது. கடந்த 2024ல் கேட் வே ஆஃப் இந்தியாவுக்குப் பதிலாக இந்த ராம ஜென்ம பூமி வாட்ச்சை இந்தியா அறிமுகப்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+