எல்லாம் நாசமா போக காரணமே மாஜி தலைமை நீதிபதி சந்திரசூட்.. உத்தவ் சிவசேனா சீனியர் சஞ்சய் ராவத் சாபம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா மிக மோசமான தோல்வியைத் தழுவ காரணமே உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்தான்; சிவசேனா தாக்கல் செய்த எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் தகுதிநீக்க வழக்கில் அவர் உரிய நேரத்தில் முடிவு எடுக்காமல் இருந்தார்; இதனாலேயே கட்சி தாவும் அரசியல்வாதிகளுக்கு பயம் இல்லாமல் போய்விட்டது என அக்கட்சியின் மூத்த தலைவரான ராஜ்யசபா எம்பி சஞ்சய் ராவத் கடுமையாக சாடியுள்ளார்.

மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றியது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 95
இடங்களில் போட்டியிட்டு வெறும் 20 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இந்த தோல்வி அக்கட்சியினரை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

maharashtra assembly election 2024 2024

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எம்பி கூறியதாவது: மகாராஷ்டிராவில் கட்சி தாவும் அரசியல்வாதிகளுக்கு சிறிதும் அச்சமே ஏற்படாத சூழ்நிலையை உருவாக்கியவர் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்தான். சிவசேனா தாக்கல் செய்த எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் தகுதி நீக்க வழக்கில் சந்திரசூட் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால்தான் கட்சி தாவிய அரசியல்வாதிகளுக்கு துணிச்சல் வந்துவிட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் டிஒய் சந்திரசூட் பெயர் கறுப்பு எழுத்துகளால் எழுதப்பட வேண்டும்.

சிவசேனாவை விட்டு ஓடிப் போனவர்கள் குறித்த தகுதி நீக்க வழக்கை டிஒய் சந்திரசூட் உரிய நேரத்தில் விசாரித்திருந்தால் மகாராஷ்டிராவின் அரசியல் களமே வேறு மாதிரியாக இருந்திருக்கும். டிஒய் சந்திரசூட்டை வரலாறு ஒரு போதும் மன்னிக்கவே மன்னிக்காது.

மகாராஷ்டிராவின் முதல்வர் யார் என்பதை குஜராத் லாபிதான் இன்று முடிவு செய்கிறது. இதற்காகவே மகாராஷ்டிராவின் முதல்வர் பதவியேற்பு விழாவை குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடத்தலாம். இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் இருந்து பிரிந்து உருவானதுதான் குஜராத் மாநிலம். மகாராஷ்டிராவில் இன்றும் குஜராத்தில் எதிர்ப்பு உணர்வு இருக்கிறது. தற்போதைய தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து குஜராத்தில் எதிர்ப்பு உணர்வை கூர்மைப்படுத்த தொடங்கி இருக்கிறது உத்தவ் தாக்கரே சிவசேனா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+