மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாக்காளர்களை விடுங்கப்பா... 'பெட்டிங்' புலிகளோட எலக்சன் ரிசல்ட் கணிப்பு இப்படித்தான் இருக்கிறது!

Google Oneindia Tamil News

மும்பை: லோக்சபா தேர்தலில் பாஜக தனித்து 240 முதல் 245 இடங்களைக் கைப்பற்றும் என்பதை முன்வைத்து பெட்டிங் உலகம் படுபிஸியாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 76 முதல் 79 இடங்கள் வரை கிடைக்கும் என்கின்றனர் பெட்டிங் புலிகள்.

லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 4 கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்துவிட்டன. எஞ்சிய 3 கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்த பின்னர் மே 23-ல் தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளன.

Satta bazzar on Loksabha Election Results

பொதுவாக கருத்து கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 277 இடங்கள் கிடைக்கும் என கூறுகின்றன. கடந்த தேர்தலில் பாஜக தனித்து 282 இடங்களைக் கைப்பற்றி இருந்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 138 இடங்கள் கிடைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். கடந்த தேர்தலில் இக்கூட்டணிக்கு மொத்தம் 59 தொகுதிகள்தான் கிடைத்திருந்தன.

இக்கருத்து கணிப்புகள் ஒருபக்கம் இருக்க பெட்டிங் உலகம் சில கருத்து கணிப்புகளை முன்வைத்து சூடாக சூதாடி வருகின்றன. பாஜக தனித்து 240 முதல் 250 இடங்களிலும் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 300 தொகுதிகள் வரை கைப்பற்றுமாம். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியே ஆளும் கட்சியாக இருந்தாலும் 18 தொகுதிகளை அள்ளிவிடுமாம் பாஜக. இப்படி கணித்திருக்கிறார்கள் பெட்டிங் மன்னர்கள்.

வரலாறு காணாத குதிரை பேரம்.. ஆயத்தமாகும் கட்சிகள்.. என்னாகப் போகுதோ ஜனநாயகம்!வரலாறு காணாத குதிரை பேரம்.. ஆயத்தமாகும் கட்சிகள்.. என்னாகப் போகுதோ ஜனநாயகம்!

காங்கிரஸ் கட்சிக்கு 76 முதல் 79 இடங்கள் கிடைக்குமாம். 3 கட்ட வாக்குப் பதிவுகளின் முடிவுகள் அடிப்படையில் இந்த பெட்டிங் கட்டப்பட்டு வருகிறதாம். மாநிலங்களின் அடிப்படையில் பெட்டிங் கிங்ஸ் சொல்வது என்ன தெரியுமா?>

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு 41, மத்திய பிரதேசத்தில் 20 முதல் 22, குஜராத்தில் 22 முதல் 24, பீகாரில் 12 முதல் 14 இடங்கள், மேற்கு வங்கத்தில் 8 முதல் 11 இடங்கள், ஹரியானாவில் 7 முதல் 9, டெல்லியில் 5 முதல் 7 தொகுதிகள் கிடைக்குமாம். மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா அணிக்கு 31 முதல் 34 தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறதாம்.

English summary
According to the bookmakers, the BJP is expected to win up to 250 of the 543 Parliament seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X