மகாராஷ்டிராவில் சிவசேனாவிற்கு ஆதரவா? சோனியாவை சந்தித்த சரத் பவார்.. என்ன பேசினார்கள்?
மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க வேண்டாம், எதிர்கட்சியாகவே தொடரலாம் என்று தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது.
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க வேண்டாம், எதிர்கட்சியாகவே தொடரலாம் என்று தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது.
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.
ஆனாலும் பாஜக - சிவசேனா இடையே இன்னும் சுமுக தீர்வு எட்டப்படவில்லை என்பதால் அங்கு ஆட்சி அமைக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது. சிவசேனா கண்டிப்பாக முதல்வர் பதவி வேண்டும் என்று உறுதியாக இருக்கிறது.

சந்திப்பு
இந்த நிலையில்தான் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை நடந்து இருக்கிறது. அவரின் சந்திப்பில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது.

பாஜக சிவசேனா
இதில் சிவசேனா பாஜக இடையில் சரியான உறவு இல்லை. அவர்கள் தற்போது கூட்டணி வைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அதனால் சிவசேனா உடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிப்பது குறித்து இரண்டு தலைவர்களும் விவாதித்து இருக்கிறார்கள்.

முடியாது
ஆனால் சிவசேனா உடன் ஐந்து வருடம் எல்லாம் கூட்டணி வைக்க முடியாது. அது மிகவும் கஷ்டம். அதேபோல் சிவசேனா உடன் கூட்டணி வைத்தால் மதசார்பற்ற தன்மை போய்விடும். சிவசேனா உடன் சேர்வது சரியாக இருக்காது என்றும் தேசியவாத தலைவர் சரத் பவார் ஆலோசித்து இருக்கிறார்.

வேண்டவே வேண்டாம்
இதையடுத்து மகாராஷ்டிராவில் எதிர்கட்சியாகவே தொடரலாம் என்று தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளது. சிவசேனாவிற்கு ஆதரவு தர வேண்டாம். அவர்கள் ஆட்சியை அமைக்கட்டும். இல்லையென்றால் தேர்தலை சந்திப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications