போட்டி வேட்பாளரின் வேட்புமனுவை வாயில் போட்டு விழுங்கிய சிவசேனா வேட்பாளர்.. பரபரப்பு சம்பவம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனே மாநகராட்சி தேர்தலில் போட்டியிட சிவசேனா கட்சியை சேர்ந்த உத்தவ் காம்ப்ளே மற்றும் மசிந்திர தாவலே ஆகியோருக்கு போட்டியிட ஏபி படிவம் வழங்கப்பட்டது. இதனால் கோபமடைந்த உத்தவ் காம்ப்ளே, மசிந்திர தாவலேவின் வேட்புமனுவுக்கான ஏபி படிவத்தை வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநகராட்சியில் 34வது வார்டில் சிவசேனா சார்பில் உத்தவ் காம்ப்ளே (வயது 34) என்பவர் போட்டியிட விரும்பினார். அதேபோல் மசிந்திர தாவலேவும் போட்டியிட ஆர்வம் காட்டினார்.

சிவசேனா சார்பில் வேட்புமனுவுக்கான ஏபி படிவம் வழங்கப்பட்டது. யாராவது ஒருவருக்கு ஏபி படிவம் தான் வழங்கப்பட வேண்டும். இதனால் இருவரையும் சிவசேனா கட்சியினர் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் சமாதானம் அடையவில்லை.
இதனால் வேறு வழியின்றி வேட்புமனுவுக்கான ஏ,பி படிவத்தை சிவசேனா கட்சி சார்பில் இருவருக்கும் வழங்கியது. பொதுவாக ஒரு வேட்பாளரை குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளராக அங்கீகரிக்க வேண்டும் என்றால் அதற்கு அந்த கட்சியின் ஏ, பி படிவங்கள் கட்டாயமாக வேட்புமனுவுடன் இணைக்கப்பட வேண்டும்.
இது இல்லாவிட்டால் அந்த வேட்பாளர் சுயேச்சை வேட்பாளராக தான் கருதப்படுவார். அதேவேளையில்
இங்கு உத்தவ் காம்ப்ளே மற்றும் மசிந்திர தாவலேவிற்கு வழங்கப்பட்டது. இதனால் 2 பேரில் ஒருவருக்கு தான் சிவசேனா வேட்பாளராக அங்கீகரிக்கப்படுவார். இதனால் இருவருக்கும் பயம் வந்தது.
இருப்பினும் 2 பேரும் தாங்காவாடி சாகர்கர் நகர் வார்டு அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய போயினர். அப்போது உத்தவ் காம்ப்ளே கடும் கோபமடைந்தார். ஆத்திரமடைந்த உத்தவ் காம்ப்ளே, மசிந்திர தாவலேவிற்கு வழங்கப்பட்ட சிவசேனாவின் ஏ,பி படிவத்துடன் இருந்த வேட்புமனுவை பிடுங்கி வாயில் போட்டு விழுங்கினார்.
இதனால் மசிந்திர தாவலே கடும் கோபமடைந்தார். அவரும், அவரது ஆதரவாளர்களும் உத்தவ் காம்ப்ளேவிடம் பிரச்சனை செய்தனர். இது பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து மசிந்திர தாவலே சார்பில் பாரதி வித்யாபீட் காவல் நிலையத்தில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‛‛தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்தபோது அரசு ஊழியரின் கடமைக்கு இடையூறு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார். இந்த சம்பவம் சிவசேனா கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications