ராவணன் ஸ்டைலில்...சிவாஜி சிலை நீக்கம்...போலி பாஜக...சாம்னாவில் சிவசேனா விளாசல்!!
மும்பை: ''கர்நாடகா மாநிலத்தில் இருந்த சத்ரபதி சிவாஜியின் சிலையை நீக்கியதன் மூலம் மகாராஷ்டிராவில் இருக்கும் பாஜகவினரை பகைத்துக் கொண்டனர். பாஜகவின் போலி பக்தியால் எந்தப் பலனும் இல்லை'' என்று சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.
இன்று வெளியாகி இருக்கும் சாம்னாவில், ''அயோத்தியில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமர் கோயிலுக்கான பூமி பூஜை போடப்பட்டது. அப்போது, சிவாஜி மகராஜாவை பிரதமர் மோடி பாராட்டி இருந்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்டது போல் அவரது சிலையும் கர்நாடகாவில் இருக்கும் மாங்குட்டி கிராமத்தில் வீழ்த்தப்பட்டுள்ளது. போர் வீரர்களுக்காண பாஜகவின் அன்பு போலியானது. நடிக்கின்றனர்.

இதேபோல் மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் சிவாஜி மகாராஜா சிலை நீக்கப்பட்டது. அப்போது, மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத்திடம் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மன்னிப்புக் கோரி இருந்தார். ஆனால், கர்நாடகாவில் நடந்த செயலுக்கு இதுவரை அந்த மாநில முதல்வர் பிஎஸ் எடியூரப்பா கண்டனம் தெரிவிக்கவில்லை.
ஒரு நாள் இரவில் சிவாஜியின் சிலை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. மகாராஷ்டிராவில் சிவாஜியை பின்தொடரும் பாஜகவினரின் மனதை இந்த செயல் மிகவும் பாதித்துள்ளது. காங்கிரஸ் கண்காணிப்பில் கர்நாடகாவில் இதுபோன்ற சம்பவம் நடந்து இருந்தால், பாஜகவினர் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்து இருப்பார்கள்.
ஆனால், இன்று பாஜகவினர் எவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள். சிவாஜி மகாராஜாவிடம் போலி அன்பு வைத்து இருப்பதன் பலன் என்ன. முந்தைய தேர்தலின்போது, சிவாஜியின் பெயரை பயன்படுத்தி, ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் அரபிக்கடல் பகுதியில் காட்டப்படும் சிவாஜியின் நினைவு மண்டபத்திற்கு ஒரு செங்கல்லை கூட பாஜக எடுத்துக் கொடுக்கவில்லை.
அயோத்தியில் குடிசையில் இருந்த ராமர் சிலையை பிரம்மாண்ட கோயிலுக்குள் நகர்த்த அடிக்கல் நாட்டினார்கள். ஆனால், கர்நாடகாவில் சிவாஜியின் சிலையை ராவணன் ஸ்டைலில் நீக்கியுள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
