இங்கேயும் வாரிசு அரசியல்?மகாராஷ்டிரா துணை முதல்வராகும் ஷிண்டே மகனுக்கு சிவசேனாவில் கடும் எதிர்ப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுக்கு விட்டுக் கொடுத்துள்ளார் இடைக்கால முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. இந்த நிலையில் மகாராஷ்டிரா துணை முதல்வராக மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டேவை பாஜக மேலிடத்துக்கு பரிந்துரைத்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே. இதனை பாஜக மேலிடமும் ஏற்றுக் கொண்டதால் தற்போது லோக்சபா எம்பியாக இருக்கும் ஶ்ரீகாந்த் ஷிண்டே, மகாராஷ்டிரா துணை முதல்வராகிறார் என்கின்றன சிவசேனா வட்டாரங்கள். ஆனால் ஶ்ரீகாந்த் ஷிண்டேவை துணை முதல்வராக்க சிவசேனா மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனராம்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 230 இடங்களைக் கைப்பற்றியது பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி. இதனைத் தொடர்ந்து புதிய ஆட்சி அமைப்பதில் மகாயுதி கூட்டணி தீவிரமாக உள்ளது. ஆனால் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தமக்குதான் முதல்வர் பதவி என்பதில் தீவிரமாக இருந்தார். இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்தது.

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, ஏக்நாத் ஷிண்டேவை தொலைபேசியில் அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தார் ஏக்நாத் ஷிண்டே. இந்த முடிவை அறிவித்த பின்னர் தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர்.
இந்த நிலையில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அரசில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராவது உறுதியாகி இருக்கிறது. சிவசேனா சார்பில் துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரும் துணை முதல்வராகிறார்.
ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டே தற்போது லோக்சபா எம்பியாக இருக்கிறார். மகாராஷ்டிராவின் கல்யாண் லோக்சபா தொகுதியில் 2014, 2019-ல் போட்டியிட்டு வென்றதுடன் ஹாட்ரிக் வெற்றியாக 2024-லும் அபார வெற்றியைப் பெற்றார். நாடாளுமன்றத்தில் இளம் மராத்தா எம்பி என்ற பெருமைக்குரியவர். 1987-ம் ஆண்டு பிறந்தவர் ஶ்ரீகாந்த் ஷிண்டே.
இதனிடையே உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யாவை முன்னிறுத்தி வாரிசு அரசியல் செய்ததால் அக்கட்சியில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே, தன் மகனை முன்னிறுத்துவதா? என்கிற சலசலப்பு சிவசேனாவில் எழுந்துள்ளது. ஏக்நாத் ஷிண்டேவின் இந்த நடவடிக்கைக்கு சிவசேனா மூத்த தலைவர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications