மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு வெற்றி?.. காளை மாட்டில் பால் கறக்க முடியுமா?.. சாம்னாவில் சேனா

Google Oneindia Tamil News

Recommended Video

    In early morning twist | தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார் !

    மும்பை: நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெறுவது என்பது காளை மாட்டில் பால் கறப்பதற்கு சமம் என தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் சிவசேனா குறிப்பிட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் அவசர அவசரமாக நடந்த பட்னவீஸ் பதவியேற்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இதுகுறித்து நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

    288 சட்டசபை தொகுதிகளில் 105 இடங்களில் வென்ற பாஜகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 40 இடங்கள் தேவை.

    என்சிபி எம்எல்ஏக்களின் கையெழுத்து இருக்கு சரி.. அதில் பாஜகவுக்கு ஆதரவுனு எங்கேயாவது இருக்கா.. சிங்விஎன்சிபி எம்எல்ஏக்களின் கையெழுத்து இருக்கு சரி.. அதில் பாஜகவுக்கு ஆதரவுனு எங்கேயாவது இருக்கா.. சிங்வி

    முக்கியம்

    முக்கியம்

    இந்த நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறுகையில் 25 ஆண்டுகாலம் சிவசேனாவுடனான நட்பை மதிக்காதவர்கள் ஒரு நாள் அஜித் பவாரையும் தூக்கி எறிவர். எல்லாவற்றையும் விட ஆட்சி அதிகாரம்தான் முக்கியம் என கருதுவோரை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    கடிதம்

    கடிதம்

    முதலில் சிவசேனா போன்ற நல்ல ஒரு நண்பரை இழந்தார்கள். தற்போது நல்ல அனுபவமுள்ள குற்றவாளி போல் குற்றத்தை இழைத்துள்ளார்கள். கட்சி அலுவலகத்திலிருந்து அஜித் பவாரால் திருடப்பட்ட கடிதத்தை ஆதரவு கடிதம் என ஆளுநரை நம்ப வைத்தது ஏமாற்றத்தின் உச்சம்.

    கறந்த பால்

    கறந்த பால்

    திருட்டுத்தனமாக பதவியேற்ற பாஜக , நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறாது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி என்பது காளை மாட்டில் பால் கறப்பது போன்றதாகும்.

    அதிருப்தி

    அதிருப்தி

    பாஜகவை ஒட்டுமொத்த மாநிலமே கேலி செய்து வருகிறது. இந்த சம்பவத்தால் பிரதமர் நரேந்திர மோடியே அதிருப்தியில் இருப்பார். பாஜக செய்த காரியம் சத்ரபதி சிவாஜியை அவமதிப்பதாகும் என சாம்னாவில் தெரிவித்துள்ளது.

    English summary
    Shiv Sena in Saamana mouthpiece says that to win in floor test, its milking in a bull for BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X