"சிவசேனா vs சிவசேனா!" ஷிண்டேவை பழிவாங்க துடிக்கும் தாக்ரே தரப்பு! மும்பை அரசியல் மொத்தமா மாறுதே
மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் மொத்தம் 6 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு மூன்று தொகுதிகளில் சிவசேனா vs சிவசேனா என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதில் மகாராஷ்டிரா மாநிலம் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நாட்டில் உத்தர பிரதேசத்திற்குப் பிறகு மகாராஷ்டிராவில் இருந்து தான் அதிக எம்பிக்கள் (48) லோக்சபாவுக்கு செல்கிறார்கள்.

சிவசேனா vs சிவசேனா: இதற்கிடையே மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் மொத்தம் 6 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு ஷிண்டே சிவசேனா அணிக்கும், தாக்கரே அணிக்கும் தான் 3 தொகுதிகளில் நேரடி போட்டி நிலவுகிறது. இரண்டு தொகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவும் சூழலில் ஒரு இடத்தில் பாஜகவை தாக்ரேவின் சிவசேனா எதிர்கொள்கிறது.
மும்பையில் உள்ள ஆறு தொகுதிகள் உட்பட மகாராஷ்டிராவில் உள்ள 13 தொகுதிகளுக்கு மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மும்பை தெற்கு, மும்பை தெற்கு-சென்டரல் மற்றும் வடமேற்கு மும்பை ஆகிய 3 தொகுதிகளில் சிவசேனா vs சிவசேனா என்ற சூழல் நிலவுகிறது. அதே நேரத்தில் வடகிழக்கு மும்பையில் பாஜக மற்றும் தாக்ரே சிவசேனா இடையே போட்டி நிலவுகிறது.. மேலும் மகாராஷ்டிராவில் முதல்முறையாக தாக்ரேவின் சிவசேனா காங்கிரஸுக்கு தேர்தலில் ஆதரவளிக்கிறது.
அரசியல் எதிரிகள்: கடந்த 2019 வரை மகாராஷ்டிராவில் காங்கிரஸும் சிவசேனாவும் பாரம்பரியமாக அரசியல் எதிரிகளாக இருந்து வந்துள்ளனர். இருப்பினும், கடந்த 2019இல் அங்கிருந்த பாஜக - சிவசேனே கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு அவர்கள் பிரிந்தனர். இதையடுத்து அப்போது காங்கிரஸ், என்சிபி உடன் கை கோர்த்து சிவசேனா ஆட்சி அமைத்தது. சில காலம் தாக்ரே முதல்வராக இருந்தார். இருப்பினும், கடந்த 2022இல் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்கள் கலகம் செய்தனர்.
இதையடுத்து ஷிண்டே எம்எல்ஏக்கள் பாஜக உடன் கைகோர்த்து ஆட்சியை அமைத்தனர். அதேநேரம் தாக்ரே தரப்பு காங்கிரஸ்- என்சிபி கூட்டணியில் தொடர்ந்தது. கடந்தாண்டு இதேபோன்ற ஒரு சம்பவம் தான் என்சிபி கட்சியிலும் நடந்தது.. அது தனிக் கதை.. ஆனால், மகாராஷ்டிராவில் சிவசேனா இரு கட்சிகளாகப் பிளவுபட இதுவே காரணமாகும்.
முதல்முறை: இந்தச் சூழலில் தான் முதல்முறையாக சிவசேனா காங்கிரஸ் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலில் களமிறங்குகிறார்கள். அதேநேரம் இரு கட்சிகளும் எதிர் எதிர் துருவங்களாக இருந்த போதும், கடந்த காலங்களில் பதவிகளைப் பெறுவதற்குப் பல சந்தர்ப்பங்களில் ஒருவித புரிதலைக் கொண்டே போட்டியிட்டுள்ளன. இப்போது இருவரும் முதல்முறையாக வெளிப்படையாகக் கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணி களத்திலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே கூறப்பட்டுள்ளது. களத்தில் சிவசேனா மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இணைந்தே வேலை செய்து வருகிறார்கள்.
மும்பை பகுதியில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரியளவில் செல்வாக்கு இல்லை என்பதே உண்மை. கடந்த 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் மும்பையில் உள்ள 6 லோக்சபா தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. சட்டசபைத் தேர்தலிலும் கூட மும்பையில் 36இல் 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடிந்தது. இருப்பினும், இந்த முறை சிவசேனா சப்போர்ட் இருப்பதால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மும்பை தொகுதிகள்: மும்பை சிட்டி மும்பை நகரம் மற்றும் மும்பை புறநகர் என இரு மாவட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் மும்பை தெற்கு மற்றும் மும்பை தெற்கு-மத்திய தொகுதிகள் மும்பை நகரத்திலும், மீதமுள்ள தொகுதிகள் மும்பை புறநகர்ப் பகுதியிலும் உள்ளன. இந்தத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய மே 3 கடைசி நாளாகும். மும்பை நகரில் மொத்தம் 24 லட்சம் வாக்காளர்களும், மும்பை புறநகரில் 74 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications