மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மஹாராஷ்டிராவில் அடுத்த கால் நூற்றாண்டு காலம் பாஜகவுக்கு இடமில்லை... அதிர வைக்கும் சிவசேனா..!

Google Oneindia Tamil News

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த கால் நூற்றாண்டு காலத்திற்கு பாஜக எதிர்க்கட்சியாக மட்டுமே இருக்க முடியும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

அர்னப் கோஸ்வாமி தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் அன்வய் நாக் குடும்பத்தினரிடம் இருந்து உத்தவ் தாக்கரே மனைவி நிலம் வாங்கியதாக பாஜக முன்னாள் எம்.பி. கிரித் சோமையா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மனைவியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Shivasena says, The BJP has no place in Maharashtra for the next 25 Years

கிரித் சோமையாவின் இந்தக் கருத்து சிவசேனா முகாமை சினம் கொள்ளச் செய்துள்ளது. கிரித் சோமையாவுக்கு கடுமையாக எதிர்வினையாற்றிய சிவசேனா செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத், அர்னப் கோஸ்வாமியால் தற்கொலைக்கு தூண்டப்பட்ட அன்வய் நாக் வழக்கை திசைதிருப்ப இது போன்ற மலிவான அரசியல் செய்வதாக பாஜக மீது பாய்ந்திருக்கிறார்.

மேலும், அன்வய் நாக் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க மராட்டிய அரசு துணை நிற்கும் என்றும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாரதிய ஜனதாவால் மஹாராஷ்டிராவில் வெற்றிபெற முடியாது எனவும் சாடியுள்ளார். மகாவிலாஸ் கூட்டணி தமது ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் எனவும் சஞ்சய் ராவத் தெரிவித்திருக்கிறார்.

அனுமதியின்றி பாஜக வேல் யாத்திரை நடத்தினால்... சட்டம் தன் கடமையை செய்யும் -அமைச்சர் ஜெயக்குமார்அனுமதியின்றி பாஜக வேல் யாத்திரை நடத்தினால்... சட்டம் தன் கடமையை செய்யும் -அமைச்சர் ஜெயக்குமார்

குற்றவாளிகளை பாதுகாக்க பாஜக முயற்சித்து வருவதாகவும் அது தாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை நடக்காத காரியம் எனவும் சஞ்சய் ராவத் தெரிவித்திருக்கிறார். தற்கொலை செய்து கொண்ட நபரின் தாய் மற்றும் மகளின் மன நிலையை எண்ணிப்பார்க்காமல் எப்படித்தான் குற்றவாளிகளுக்கு உங்களால் துணை நிற்க முடிகிறது என பாஜக முன்னாள் எம்.பி. கிரித் சோமையாவை கேள்விகளால் விளாசியுள்ளார்.

English summary
Shivasena says, The BJP has no place in Maharashtra for the next 25 Years
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X