கங்குலியின் விலா எலும்பை குறி வைத்து தாக்க எனக்கு உத்தரவு.. உண்மையை உடைத்த பாக் வீரர் ஷோயப் அக்தர்
மும்பை: இந்திய பேட்ஸ்மேன்களின் தலை மற்றும் விலா எலும்பை குறி வைக்கும்படி தன்னை கேட்டுக் கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உண்மையை உடைத்து பேசியுள்ளார்.
Recommended Video
15 ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா 7 முறை கோப்பையை வென்றுள்ளது.
இந்த நிலையில் வரும் 28 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் இடையே போட்டிகள் நடைபெறுகின்றன. இது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நத போட்டிகள் குறித்து முன்னாள் வீரர்களும் பேசி வருகிறார்கள்.

யூடியூப் சேனல்
இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் அண்மையில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் மற்றும் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் ஆகியோர் பேசுகிறார்கள். அவர்கள் இருவரும் மொகாலியில் 1999 ஆம் ஆண்டு சவுரவ் கங்குலிக்கு அக்தர் பந்து வீசிய சம்பவம் குறித்து பேசுகிறார்கள்.

ஷோயப்
அந்த வீடியோவில் ஷோயப் பேசும் போது மொகாலியில் போட்டி தொடங்குவதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியினர் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து ஒரு யூகத்தை வகுக்க சிறிய அளவில் ஒரு மீட்டிங்கை நடத்தினோம். அப்போது இந்திய பேட்ஸ்மேன்களின் தலை மற்றும் விலா எலும்பை குறிவைக்கும்படி என்னிடம் கேட்கப்பட்டது.

கங்குலியின் விலா எலும்பு
அந்த பேட்ஸ்மேன்களின் லிஸ்டில் கங்குலியின் பெயரும் இருந்தது. இதையடுத்து கங்குலிக்கு பந்து வீசும் போது அவரது விலா எலும்பில் குறி வைக்க முடிவு செய்தோம். அது போல் இந்திய பேட்ஸ்மேன்களை எப்படி அடிப்பது என்பது குறித்து முன்கூட்டியே பேசி வைத்துக் கொண்டோம். அப்போது நான் இந்திய வீரர்களை அவுட் ஆக்க வேண்டாமா என கேட்டேன்.

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்
அதற்கு அவர்கள் வேண்டாம், நீங்கள் வேகமாக பந்து வீசுவீர்கள் அதனால்தான் உங்களுக்கு ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்ற பெயர் உள்ளது. எனவே அந்த வேகத்தை வைத்து பேட்ஸ்மேன்களை அடிக்க முயற்சி செய்யுங்கள், நாங்கள் விக்கெட் எடுப்பதை பார்த்துக் கொள்கிறேன் என அக்தர் கூறியுள்ளார். இதை தனக்கு செய்ய சொல்லி சொன்னவர் சலீம் மாலிக் என்றும் தெரிவித்துள்ளார்.

அக்தரின் பந்துவீச்சு
1999 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் அக்தரின் பந்து வீச்சால் கங்குலியின் விலா எலும்புகள் தாக்கப்பட்டு அவர் களத்திற்கு வெளியே செல்ல வேண்டியிருந்தது. மேலும் அவரால் அதிரடியாக விளையாட முடியாமலும் போனது. இந்த சம்பவத்தை தான் சவுரவிடமே சொல்லியுள்ளதாக கூறிய அக்தர், சவுரவிடம் " 1999 ஆம் ஆண்டு போட்டியில் எங்கள் நோக்கமே உங்கள் விலா எலும்பின் மீதுதான்! உங்களை வெளியேற்றுவது அல்ல" என கூறியிருந்தார்.

குப்பையான சம்பவம்
சர்வதேச போட்டிகளில் சவுரவ் கங்குலிதான் நான் வீசிய பந்துகளை துணிச்சலாக எதிர்கொண்டார். எனது வேக பந்து வீச்சை எதிர்கொள்ள பயப்படுவதாகவும் என்னை எதிர்கொள்ள அச்சமடைவதாகவும் சொல்லப்படுவதெல்லாம் குப்பையான சம்பவம். கங்குலி மிகவும் துணிச்சலானவர் என கடந்த 2020ஆம் ஆண்டு வழங்கிய பேட்டியில் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications