"மனித எலும்பு தூள்".. எலும்பு சாம்பலை.. பெண்ணின் வாயில் கொட்டி.. ஐயோ.. மொத்த பேரையும் தூக்கிய போலீஸ்
பெண்ணுக்கு மனித எலும்பு சாம்பலை தந்து சாப்பிட வைத்த குடும்பத்தினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
மும்பை: மாந்திரீகத்தில் ஈடுபட்ட மொத்த குடும்ப உறுப்பினர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விரைவில் கைது செய்வோம் என்றும் போலீசார் உறுதி தந்துள்ளனர்.. என்ன நடந்தது?
சமீப காலமாகவே மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றன.. உடல்நலம் பாதிக்கப்பட்டாலும்கூட டாக்டர்களிடம் நோயாளிகளை அழைத்து செல்லாமல், மாந்திரீகம், குறி கேட்பது, உட்பட பல்வேறு விபரீத விஷயங்களில் சிலர் இறங்கிவிடுகிறார்கள்..
குறுக்கு வழியில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற பேராசையால், அப்பாவி உயிர்களை, சிலர் காவு வாங்குவதும் தொடர்கதையாகி வருகின்றன..

பேராசைபேர்வழி
கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளாவில், அதுவும் பெண்கள் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாநிலத்தில், சமீப நாட்களில் குற்றங்கள் பெருகி கொண்டிருப்பது மேலும் அதிர்ச்சியை கூட்டி வருகிறது.. நரபலி என்ற பெயரில் மூடபழக்கத்திற்கு ஆளாகி, மனிதர்களை கொன்று, உடல்பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் போட்டு வேகவைத்து, குழம்பு வைத்து சாப்பிடும் அளவுக்கு, சில "பேராசைபேர்வழிகள்" நம்மை உறைய வைத்துள்ளனர்.. இப்படியான கொடூர சம்பவத்தில், பெண்களே ஈடுபட்டதுதான், அதைவிட அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியது..

மாந்திரீக மாமியார்
கேரளா என்றில்லை, மாந்திரீக, மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்கள் பரவலாக எல்லா மாநிலங்களிலுமே பரவி கிடக்கிறது.. விஞ்ஞானம், தொழில்நுட்பம், கல்வி போன்றவைகள் ஒருபக்கம் வளர்ந்து வந்தாலும், இப்படியெல்லாம்கூட நடக்குமா? என்று மறுபக்கம் கலக்கத்தை தரும் சம்பவங்களும் நிகழத்தான் செய்கிறது.. அப்படித்தான் புனேவில் ஒரு சம்பவமும் நடந்துள்ளது.. அந்த பெண்ணுக்கு 29 வயதாகிறது.. கடந்த 2019-ல் அவருக்கு திருமணம் நடந்துள்ளது.. இவரது கணவர் கம்ப்யூட்டர் என்ஜினியர்.. திருமணம் ஆனதில் இருந்தே மாமியார் வீட்டில், அந்த பெண்ணுக்கு, நிறைய கொடுமைகளை செய்தார்களாம்.

மாமியார்
திருமணமான அடுத்த வருடமே கொரோனா தாக்கம் ஏற்பட்டதால், பொருளாதார இழப்பை அக்குடும்பம் சந்தித்துள்ளது.. அதனால், வரதட்சணை பணம் வேண்டும் என்று, இளம்பெண்ணை கொடுமைப்படுத்த துவங்கி உள்ளனர்.. ஒருகட்டத்தில் அப்பெண்ணையும் தாண்டி, அவரது அப்பாவிடமும் நகை, பணம் போன்றவற்றை மாமியார் குடும்பத்தினர் பறித்திருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, மாமியார் வீட்டில் அனைவருக்குமே மாந்திரீகத்தில் நம்பிக்கை உடையவர்களாம்.. திருமணம் நடந்து 4 வருடங்கள் ஆகியும், பெண் கருத்தரிக்கவில்லை என்பதால், அது தொடர்பாக பிரச்சனையும் வீட்டில் வெடித்துள்ளது..

சாம்பல் எலும்பு
அதனால், வீட்டிற்குள்ளேயே மாந்திரீக காரியங்களை செய்ய ஆரம்பித்தனர்.. இதற்காகவே ஒரு மந்திரவாதியை அழைத்து வந்தார்களாம்.. வீட்டிலேயே பூஜைகளை நடத்தியிருக்கிறார்கள்.. அதுவும் மனித எலும்புகளை வைத்து மாந்திரீக பூஜைகளை செய்துள்ளனர்.. பின்னர், அந்த மனித எலும்புகளை உடைத்து, சாம்பல் போல தூளாக்கி விட்டு, அதை அந்த பெண்ணிடம் தந்து சாப்பிட சொன்னார்களாம்.. இதனால் அந்த பெண் பதறிப்போய், எலும்பு சாம்பலை சாப்பிட மறுத்துள்ளார்.. உடனே, ஆத்திரமடைந்த குடும்பத்தினர், பெண்ணை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்...

எலும்பு சாம்பல்
அப்போதும் எலும்பு சாம்பலை சாப்பிட மறுக்கவும், தலையில் துப்பாக்கி வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.. அதற்கு பிறகு, அந்த பெண் பயந்துபோய், எலும்பு சாம்பலை சாப்பிட்டுள்ளார்.. இப்படிப்பட்ட கொடுமைகள் பலமுறை நடந்த நிலையில், கடந்த வருட மே மாதம், அந்த அப்பாவி பெண்ணை வீட்டை விட்டே விரட்டி உள்ளனர்.. இதற்கு பிறகுதான், வேறுவழியில்லால் புனே போலீசுக்கு போனார் அந்த பெண்.. அவர் தந்த புகாரின்பேரில் பெண்ணின் கணவர், அவரது குடும்பத்தினர், முக்கியமாக அந்த மந்திரவாதி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. விரைவில் இவர்கள் எல்லாருமே கும்பலாக கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் உறுதி தந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications