மே 1 நாளை முதல் ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படுகிறதா? கோயில் நிர்வாகம் விளக்கம்!
மும்பை: மே 1 ஆம் தேதி முதல் ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படுவதாக வெளியாகும் தகவல்களை கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரில் பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோயில் உள்ளது. இங்கு உலகெங்கும் வாழும் சாய்பாபா பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து வழிபாடு நடத்துகிறார்கள். மேலும் விசேஷ நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் கோயிலுக்கான பாதுகாப்பை இனி மத்திய தொழிலக பாதுகாப்பு படை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. சாய்பாபா கோயில் அறக்கட்டளை அமைப்பின் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை முதல் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என தகவல்கள் பரவத் தொடங்கின. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. மேலும் கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்காக ரயில் டிக்கெட், விமான டிக்கெட், டிராவல்ஸில் கட்டணம் உள்ளிட்டவைகளை புக் செய்துவிட்டனர்.
இந்த நிலையில் கோயில் மூடப்படும் என்ற தகவல் வெளியானதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது மகாராஷ்டிரா போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் எதற்காக கோயிலுக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படை என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ஷீரடியில் வசிக்கும் மக்கள் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து அவர்களை நேரில் சந்தித்து பேசிய மகாராஷ்டிரா மாநில வருவாய்த் துறை அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் போராட்டம் நடத்தும் உள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் ஷீரடி சாய்பாபா கோயிலில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை உத்தரவை கண்டித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்படும் என உறுதியளித்தார்.
இதை ஏற்ற உள்ளூர் மக்கள் பந்த் போராட்ட அறிவிப்பை திரும்ப பெற்றனர். இந்த நிலையில் இதுகுறித்து ஷீரடி கோயில் நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது: ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை, ஷீரடி, ஸ்ரீ சாய்பாபா சமிதி கோயில் சார்பில் வரும் திங்கள்கிழமை (மே 1 நாளை) முதல் அனைத்து ஆரத்திகளும் மத வழிப்பாடுகளும் நடத்தப்படும்.

கோயிலில் பிரசாதம் வழங்கும் இடம், அனைத்து தங்குமிடங்களும் மருத்துவமனைகளும் வழக்கம் போல் இயங்கும். இந்த தகவல்களை ஷீரடி சாய்பாபா கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜாதவ் அளித்துள்ளார். ஷீரடி என்பது அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். இங்கு சாய்பாபா கோயிலின் பக்தர்கள் குடியிருந்து வருகிறார்கள்.
இங்கு ஜாதி , மதம், மொழி ஆகியவற்றை கடந்து இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்த கோயில் அகமது நகர் - மன்மத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மத்திய தொழிலக பாதுகாப்பு படை கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஷீரடி விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அது போல் சாய்பாபா கோயிலிலும் அந்த படையினரை பாதுகாப்புக்காக குவிக்க அரசு உத்தரவிட்டது. சாய்பாபா கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையானது கோயில் நிர்வாகத்தை பராமரிப்பது, இலவச உணவு திட்டம், தங்குமிடம் மற்ற வசதிகளை கவனித்து வருகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications