லோயர் பெர்த்தில்.. அதுவும் ஏசி கோச்சில் "தலையை" சாய்த்த உருவம்.. ரயிலில் இரும்பு கம்பியில் யாருங்க?
மும்பை மற்றும் ஜபல்பூர் இடையே இயங்கும் கரீப் ரதம் விரைவு ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை, ரயில்களின் சேவையானது, தவிர்க்க முடியாததாகிவிட்டது. சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் ரயில்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் ரயில் சேவைகளின் தேவை இருப்பதால், ரயில்வே நிர்வாகமும் ஏராளமான ரயில்களையும், அதற்கான சலுகைகளையும் அறிவித்து வருகிறது.

பூச்சிகள்: எனினும், ரயில் பயணத்தின்போது அதில் எலிகள், பெருச்சாளி, கரப்பான், மூட்டை பூச்சிகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுவது வாடிக்கையான ஒன்றாகும்.. ஆனால், சமீபகாலமாக, ரயில்களுக்குள் பாம்புகள் வந்துவிடுவது அதிர்ச்சியை தந்து வருகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் கேரளாவில் ஒரு சம்பவம் நடந்தது.. குருவாயூரிலிருந்து தமிழகத்துக்கு ரயில் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது, தென்காசியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியிருக்கிறார்.. காலை 10 மணியளவில் கோட்டயம் அருகே ரயில் வந்தபோது, தன்னை ஏதோ கடிப்பது போல கார்த்திக் உணர்ந்துள்ளார். பிறகு வலியால் அலறி துடித்துள்ளார் கார்த்திக்.
பாம்புகள்: அப்போதுதான், ரயிலில் அவரது இருக்கைக்கு அடியில் பாம்பு இருப்பதை கண்ட பயணிகள் அலறி கூச்சலிட்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து எட்டுமனூர் ஸ்டேஷனில் ரயில் நிறுத்தப்பட்டது...
ரயிலில் 6வது பெட்டியை ரயில்வே அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்... இந்த பாம்பு எப்படி ரயிலுக்குள் வந்தது என தெரியவில்லை.. ஒருவேளை, ரயில் நிறுத்தப்பட்டிருக்கும்போது, புதர் பகுதிகளில் இருந்து ஊர்ந்து வந்த பாம்பு பெட்டிக்குள் ஏறியிருக்கலாம் என்றார்கள்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்திருந்த நிலையில், இன்னொரு பாம்பு சம்பவம் நடந்துள்ளது.
Snake spotted in AC coach of Jabalpur-Mumbai Garib Rath express.
— Avishek Goyal (@AG_knocks) September 22, 2024
Reel minister is trying his best to ensure more adventure to passengers.
Cc @MrSinha_ @kapsology @vinodkapri pic.twitter.com/MBJ1xBgrHY
இரும்பு கம்பிகள்: மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரிலிருந்து மும்பைக்கு கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.. இந்த ரயிலின் மேல் பக்க பெர்த்தின் இரும்பு கம்பியை சுற்றி நீளமான பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது..
G17 பெட்டியில் இருந்த பயணி ஒருவர் பாம்பு சீறுவதை பார்த்து பதறிப்போய், சக பயணிகளை எச்சரித்தார்... உடனே ரயில் பெட்டியிலிருந்த பயணிகள் அனைவருமே அலறிவிட்டார்கள்.. கம்பியில் சுற்றிக்கொண்டிருந்த பாம்பு, தன்னுடைய தலையை நீட்டி சீறி கொண்டேயிருந்தது.. இதனால், அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் வேறு பெட்டிக்கு பதறியடித்து கொண்டு ஓடினார்கள். விரைந்து அந்த பம்பும் ரயிலில் இருந்து அகற்றப்பட்டது.
கோரிக்கை: பாம்பு ரயில் பெட்டியில் இருந்தது தொடர்பான வீடியோ தற்போதுதான் வைரலாகி வருகிறது. நாளுக்கு நாள் பாம்புகளின் படையெடுப்பு ரயில்களில் நடப்பதால், ரயில்வேதுறை இது தொடர்பான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications