உத்தவ் தாக்ரே பதவியேற்பு.. வர முடியவில்லை, வாழ்த்துக்கள்.. சோனியா காந்தி கடிதம்.. ராகுலும் ஆப்சென்ட்
Recommended Video
மும்பை: சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மகாராஷ்டிராவில் இன்று ஆட்சியமைக்கின்றன. சிவசேனாவின் உத்தவ் தாக்ரே முதல்வராகிறார். தாக்ரே குடும்பத்திலிருந்து முதல்வராகும் முதல் நபர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
இதில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மதசார்பற்ற கட்சிகளாகவும், சிவசேனா, இந்துத்துவா கொள்கை கொண்ட கட்சியாகவும் அறியப்பட்டு வருகிறது. எனவே இது ஒரு பொருந்தா கூட்டணி என்றும், காங்கிரசுக்கு இதில் விருப்பம் இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், அஜித் பவார், பட்னவிஸ் இணைந்து ஆட்சியமைத்து 3 நாட்களுக்கு நடத்திய குளறுபடியால், இந்த விவகாரம் இப்போது மறந்து போய்விட்டது.

காங்கிரசும், சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க ஒப்புக் கொண்டது. இத்தனைக்கும், காங்கிரஸ், சிவசேனா கூட்டணி என்பது சமீபத்தில் நடப்பது கிடையாது. இந்திரா காந்தி காலத்திலேயே, இருவரும் மகாராஷ்டிராவில், தாய்-குழந்தை போன்ற உறவுடன் இருந்தவர்கள்தான்.
இருப்பினும், 1990களுக்கு பிறகு, சிவசேனா தீவிர இந்துத்துவா கட்சியாக உருவெடுத்தது. எனவே, காங்கிரஸ் இன்னும் கூட சிவசேனா கூட்டணியில் ஒரு தயக்கத்தோடையே தொடருகிறது.
இந்த நிலையில்தான், உத்தவ் தாக்ரே பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இருப்பினும், உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்க உள்ளதால், சோனியா காந்தி, அவருக்கு கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்தார். தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில், உத்தவ் தாக்ரே, அவர், வாழ்க்கையில் மிகச் சிறந்தவற்றை பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். புதிய அரசு, மகாராஷ்டிரா மக்களின் நம்பிக்கையையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று தலைவர்களிடையே பேசி முடிவெடுக்கப்பட்டு, மதச்சார்பின்மை உள்ளிட்ட அம்சங்களுடன், குறைந்தபட்ச செயல் திட்டம் இன்று வெளியிடப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications