இன்டர்நெட் ஸ்லோவா?.. "ஐ யாம்" ரொம்ப பிஸி.. நாளை வரை சமாளிக்க முடியுமா?.. நிறைய வேலை கிடக்கு- சோனு
மும்பை: செல்போனில் இணையதளத்தின் வேகம் ரொம்ப ஸ்லோவாக இருக்கிறது, அதை வேகப்படுத்த முடியுமா என கேட்ட நெட்டிசனுக்கு நடிகர் சோனு சூட் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
Recommended Video
தமிழ், இந்தி சினிமாக்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சோனு சூட். தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் அறியப்பட்டவரும் கூட. இப்படிப்பட்ட சோனு சூட் தற்போது நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகிவிட்டார்.
ஆம், நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். அது போல் சோனு சூட்டின் மனம் இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் தெரியவந்தது. முதலில் மகாராஷ்டிராவிற்கு வந்து சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவித்த தொழிலாளர்களை தனது சொந்த செலவில் தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டு சேர்த்தார்.

டிராக்டர்
அதுபோல் வேலையில்லாமல் அவதிப்பட்டு வந்த ஒரு பெண்ணுக்கு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கொடுத்தார். அது போல் ஆந்திராவில் மாடு வாங்க காசு இல்லாததால் தனது மகள்களையே மாடு போல் பூட்டி ஏர் உழுத விவசாயிக்கு சொந்தமாக டிராக்டர் வாங்கிக் கொடுத்தார்.

புத்தகங்கள்
இது போல் சத்தம் இல்லாமல் பல உதவிகளை செய்து வரும் சோனு சூட்டை சிலர் நகைச்சுவையாக பல உதவிகளை கேட்டு வருகிறார்கள். அண்மையில் ஒருவர் தனக்கு வீடியோ கேம் வேண்டும் என கேட்டார். அதற்கு சோனு சூட்டோ, வேண்டுமென்றால் புத்தகங்களை அனுப்புகிறேன் என பதிலளித்தார்.

இணையம் ஸ்லோ
அது போல் ட்விட்டர்வாசி ஒருவர் சோனு சூட்டிடம், தன்னுடைய செல்போனில் இணையம் வேகம் குறைவாக இருக்கிறது. அதை வேகப்படுத்தித் தரமுடியுமா என கேட்டுள்ளார். அதற்கு சோனு சூட்டும் கிண்டலாகவே பதிலளித்துள்ளார். தனது ட்விட்டரில் சோனு கூறுகையில் காலை வரை பொறுத்துக் கொள்ள முடியுமா? இப்போது ஒருவருடைய கம்ப்யூட்டரை சரி செய்து கொண்டிருக்கிறேன், ஒருவரது திருமண ஏற்பாடுகளை முடித்துக் கொண்டு இருக்கிறேன்.

கிண்டல் பதில்
ஒருவருக்கு ரயில் டிக்கெட் எடுத்து கொண்டிருக்கிறேன். ஒருவரின் தண்ணீர் பிரச்சினையை சரி செய்கிறேன். இது போல் சில முக்கியமான வேலைகளை மக்கள் எனக்கு கொடுத்துள்ளார்கள் என சோனு சூட் கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதை ரசிகர்களும் வரவேற்றுள்ளார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications