போதையில் தெருநாயை கூட்டாக பலாத்காரம் செய்த ‘குடி மகன்கள்’.. மும்பையில் பயங்கரம்
தெருநாயை நான்கு பேர் போதையில் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
Recommended Video

மும்பை: மும்பையில் போதையில் இருந்த நான்கு ஆண்கள் சேர்ந்து தெருநாய் ஒன்றை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் மால்வானி சர்ச் அருகே வசித்து வருபவர் சுதா பெர்னாண்டஸ். தினசரி அப்பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு உணவளிப்பது அவரது வாடிக்கை. அப்படியாக கடந்த வாரம் சனிக்கிழமை தெருநாய் ஒன்றிற்கு உணவு அளிக்கச் சென்றுள்ளார் சுதா.

ஆனால், அந்த நாய் மிகுந்த சோர்வுடன் உடலில் காயங்களுடன் கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது தொடர்பாக அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவரும் அங்கு விரைந்து வந்தார். எப்போதும் அவர்களைக் கண்டால் பாசத்துடன் ஓடி வரும் அந்த நாய், அன்று இவர்களைக் கண்டு அஞ்சியுள்ளது. அதோடு நகர முடியாமல் அவதிப்பட்டுள்ளது.
இதனால் குழப்பமடைந்த சுதா, நாயை நன்றாக பார்த்தபோது அதன் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு அதில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக விலங்குகள் நலனுக்காக பாடுபட்டு வரும் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து நாயை கொண்டுபோய் கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அந்த நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே காயமடைந்த நாயை சம்பவத்தன்று நான்கு இளைஞர்கள் போதையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதைப் பார்த்ததாக சுதாவிடம் ஆட்டோ டிரைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை அதிகாலையில் 2 மணியளவில் போதையில் இருந்த நான்கு பேர், நாயின் கால்கள் மற்றும் வாயைக் கட்டிப் போட்டுவிட்டு அதனை பலாத்காரம் செய்ததாகவும், நாயின் ஓலத்தைக் கேட்டு தான் அந்த இடத்திற்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னைப் பார்த்ததும் போதை ஆசாமிகள் அங்கிருந்து ஓடி விட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மால்வானி போலீசார் விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 11வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் கூறிய குற்றவாளிகள் நான்கு பேரையும் தேடி வருகிறார்கள்.
போதையில் தெரு நாயை பாலியல் ரீதியாக சிலர் துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications