Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் 2 மணி நேரத்தில் ரூ.3 லட்சம் கோடி போச்சு.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. பங்குச்சந்தை மோசம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் (Stock market) சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி என இரண்டுமே இன்று மிகப் பெரியளவில் சரிந்துள்ளன. பட்ஜெட், அமெரிக்க வட்டி விகித முடிவுகள் இதற்குக் காரணமாக இருக்கிறது. பல்வேறு பங்குகளின் மதிப்பும் மிகப் பெரியளவில் குறைந்ததால்.. இன்று ஒரே நாளில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு இல்லாமல் போனது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வரும். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. டிரேட் செய்வோர், நீண்ட கால முதலீடு செய்வோர் என இரண்டுமே அதிகரித்துள்ளது. இது தவிர மியூச்சுவல் பண்ட் மூலம் முதலீடு செய்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

Stock market Crash Sensex 600 Points 3 Lakh Cr Lost Budget Jitters Hit and other reasons

ரூ.3 லட்சம் கோடி

இதனால் பங்குச்சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் பலரது சேமிப்பையும் கூட நேரடியாகப் பாதிப்பதாக இருக்கிறது. இன்றைய தினம் இந்தியப் பங்குச் சந்தைகள் ஆரம்பித்தது முதலே பெரும் சரிவைச் சந்தித்தன. ஒரே நாளில் முதலீட்டாளர்கள் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் கரைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 25,200 புள்ளிகளுக்குக் கீழேயும் வீழ்ந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டது.

கடும் சரிவு

பங்குச்சந்தை இந்தளவுக்குச் சரிய வரவிருக்கும் மத்திய பட்ஜெட் குறித்த நிச்சயமற்ற தன்மையே முக்கியக் காரணமாகும். பட்ஜெட் அறிவிப்புகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், செலவுகள், வரிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசு என்ன முடிவெடுக்கும் என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். இதனால் பங்குச்சந்தையில் இருக்கும் தங்கள் பணத்தை வெளியே எடுக்கவே விரும்புகிறார்கள். அதுவே இந்தச் சரிவுக்குப் பிரதானக் காரணமாகும்.

ஐடி, ஆட்டோமொபைல் உள்படப் பல துறைகளின் பங்குகளிலும் பலவீனமாகக் காணப்பட்டது. இது மட்டுமின்றி பல முக்கிய பங்குகளும் கூட கடுமையாகச் சரிந்தது. சர்வதேச அளவிலும் அமெரிக்கா வட்டி குறைப்பு எதையும் செய்யவில்லை. இதனால் இந்தியா- அமெரிக்கா இடையே வட்டிகளில் வேறுபாடு குறைந்துள்ளது. இதன் காரணமாகச் சிறந்த ஆதாயங்களுக்காக அந்நிய முதலீட்டாளர்கள் பணத்தை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்கிறார்கள். இதுவும் சேர்ந்து இந்தியச் சந்தையைக் கடுமையாகப் பாதித்தன.

அச்சம் வேண்டாம்

அதேநேரம் இதை மிகப் பெரிய ரெட் சிக்னலாக கருதத் தேவையில்லை என்கிறார்கள் வல்லுநர்கள். பட்ஜெட் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு முன் இது போன்ற சரிவுகள் பொதுவானவை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கொள்கைத் தெளிவும் உலகளாவிய வட்டி விகித உறுதிப்பாடும் கிடைக்கும் வரை சந்தையில் ஏற்றத்தாழ்வு தொடரலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காரணங்கள்

பட்ஜெட் தாண்டியும் சில காரணங்கள் இருக்கவே செய்கிறது. முதலில் ரூபாய் மதிப்பு சரிவு.. ரூபாய் மதிப்பு இப்போது வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.95 தொட்டுவிட்டது. இப்போது சற்று மேம்பட்டாலும் கூட அது வேகமாகச் சரிந்து வருகிறது. இதுவும் இந்தியப் பங்குச்சந்தைகளை நேரடியாகப் பாதிக்கிறது.

அதேபோல அமெரிக்கா ஈரான் இடையேயான மோதலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மத்தியக் கிழக்கில் போர் வெடிக்கும் என்ற அச்சமும் இன்னொரு காரணம். இதுபோன்ற காரணங்களாலேயே இந்தியப் பங்குச்சந்தை இன்று தொடங்கியது முதலே சரிந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+