ஹோட்டலில் பெண் டாக்டருக்கு என்ன நடந்தது.. சப் இன்ஸ்பெக்டர், ஐடி இன்ஜினியர் குறித்து புதிய தகவல்கள்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த 28 வயது பெண் டாக்டர் வாழ்க்கையை முடித்துக் கொண்ட வழக்கு அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. அரசியல் கட்சிகளுமே இதை பயன்படுத்தி ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கின. இந்நிலையில் பெண் டாக்டர் வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண், அங்குள்ள சத்தாரா மாவட்டத்தில் உள்ள பல்தான் துணை மாவட்ட அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். அவர் மருத்துவமனையில் வேலை செய்வதால், அதன் அருகே உள்ள ஓட்டல் அறையில் தங்கியிருந்தபடி தான் தினமும் வேலைக்கு சென்று வந்தாராம். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வாழ்க்கையை முடித்துக்கொண்ட அவர், தனது உள்ளங்கையில் அதற்கான காரணத்தை குறிப்பு எழுதி வைத்திருந்தார்.

நான்கு முறை அத்துமீறல்
அதில் பல்தான் நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே மற்றும் பல்தானில் தான் வசித்து வந்த அடுக்குமாடி கட்டிட வீட்டின் உரிமையாளரின் மகனான சாப்ட்வேர் என்ஜினியர் பிரசாந்த் பங்கரின் ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தன்னை 4 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார். பிரசாந்த் பங்கர் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தி வந்ததாக அந்த கைக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
4 பக்க கடிதம்
அத்துடன் பெண் டாக்டர் எழுதி வைத்திருந்த 4 பக்க பரபரப்பு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில், சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர் விரிவாக பட்டியல் போட்டிருந்தாராம். மேலும் கைதான கைதிகளுக்கு போலி உடல்தகுதி சான்று வழங்கும்படி போலீஸ் அதிகாரிகள் துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இந்நிலையில் இளம் பெண் டாக்டரின் இந்த முடிவு மகாராஷ்ரா மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதளங்களில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஐடி என்ஜினியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கில் கடந்த 25ம் தேதி அன்று, பெண் டாக்டர் குற்றம்சாட்டிய, சாப்ட்வேர் என்ஜினியர் பிரசாந்த் பங்கரை புனேயில் போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீஸ் காவலில் இருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
முக்கிய குற்றவாளியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தலைமறைவாக இருந்தார். அவருக்கு போலீசார் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருவதாக பெண் டாக்டரின் உறவினர்கள் குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து பட்னாவிஸ் அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கின. ஆளும் கட்சியான பாஜக முன்னாள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றன.
முதல்வர் பதில்
இதற்கு பதிலளித்து நேற்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "தற்கொலை செய்துகொண்ட பெண் டாக்டர் எனது இளைய சகோதரி போன்றவர் ஆவார். அவரடைய வழக்கில் எந்த சமரசமும் செய்து கொள்ளமாட்டேன். அவரது குடும்பத்தினருக்கு நீதியை பெற்று கொடுக்கும் வரை நான் ஓயமாட்டேன். இதனை அரசியல் ஆக்க வேண்டாம்" என்று கூறினார்.
சப் இன்ஸ்பெக்டர் கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே, பல்தான் கிராமப்புற போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது ஒருபுறம் எனில், கைதான சாப்ட்வேர் என்ஜினீயரின் சகோதரர் மற்றும் சகோதரி ஆகிய இருவருமே, வாழ்க்கையை முடித்துக் கொண்ட பெண் டாக்டர் மீது தான் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். அவர்கள் பெண் டாக்டர் பற்றி கூறுகையில், "பெண் டாக்டர் எங்களுடைய வீட்டில் ஒரு ஆண்டுக்கு முன்பு வாடகைக்கு குடியேறியிருந்தார். அவரை எங்கள் தாயார் ஒரு மகள் போல கவனித்துக் கொண்டார்.
திருமணம் செய்ய வலியுறுத்தினார்
ஆனால் எங்களது சகோதரனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு சம்பந்தப்பட்ட பெண் டாக்டர்தான் சிகிச்சை அளித்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்ளும்படி அவர்தான் எங்களது சகோதரனை வற்புறுத்தி வந்தார். பிரசாந்த் பங்கர் அவரை கொடுமைப்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறார்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications