மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.!
மும்பை: 2019-ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா அழகி பட்டத்தை ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ராவ் தட்டிச் சென்றுள்ளார்.
ஆண்டுதோறும் மிஸ் இந்தியா பட்டத்திற்கான அழகி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த மிஸ் இந்தியா போட்டியில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் பங்கேற்பார்கள்.

இவர்களுக்கு பல தகுதி சுற்றுகள் நடைபெறும். இறுதியாக நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு, மிஸ் இந்தியா பட்டம் அளிக்கப்படும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், மிஸ் இந்தியா பட்டம் பெறும் அழகியே அடுத்து நடைபெறும் உலக அழகிக்கு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்.
அந்த வகையில் 2019-ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா கிராண்ட் இறுதி போட்டி மும்பையில் நடைபெற்றது. மும்பை சர்தார் வல்லபபாய் பட்டேல் உள்ளரங்கில் நடைபெற்ற கலர்ஃபுல்லான இறுதிச்சுற்றில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான இளம்பெண் சுமன் ராவ், மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் சென்றார்.
சுமன் ராவுக்கு கடந்த 2018-ம் ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ், கிரீடத்தினை தலையில் சூட்டினார்.
2019ம் ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, வரும் டிசம்பர் மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள மிஸ் வேர்ல்ட் எனப்படும் உலக அழகிக்கு போட்டியில், சுமன் ராவ் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மிஸ் இந்தியா போட்டியில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சஞ்சனா விஜ் என்பவர், ரன்னர் அப் என்ற 2-வது இடம் பெற்றார். நேற்றைய இறுதி போட்டியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரேயா சங்கர் என்ற இளம்பெண், மிஸ் இந்தியா யுனைட்டட் பட்டம் வென்றார். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஷிவானி என்பவர், மிஸ் கிராண்ட் இந்தியா பட்டத்தை வென்றனர்.
மிஸ் இந்தியா 2019-ம் ஆண்டிற்கான போட்டியில் பாலிவுட் பிரபலங்கள் சுனில் சேத்ரி, நடன இயக்குநர் ரெமோ டி சோசா, 2018ம் ஆண்டில் உலக அழகி வெனஸா, நடிகைகள் சித்ரங்கா, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்றனர்.
ஏற்கனவே மிஸ் இந்தியாவாக தேர்வாகி சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய். பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, யுக்தா முகி போன்றோர் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளனர். பின்னர் 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2017-ல் இந்தியாவை சேர்ந்த மனிஷி சில்லார் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது மிஸ் இந்தியா பட்டம் வென்றுள்ள சுமன் ராவ் ,2019-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications