நிலவில் நிலம்.. சனி கிரகத்தை காண காஸ்ட்லி டெலஸ்கோப்.. சுஷாந்த்தின் பொக்கிஷங்கள்.. எல்லாம் போச்சு!
மும்பை: இந்தியாவில் நிலவில் இடம் வாங்கிய ஒரே நபர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆவார். இந்த இடத்தை இவர் 2018-ஆ்ம ஆண்டு வாங்கியிருந்தார்.
தோனியின் பயோபிக் திரைப்படத்தில் நடித்த சுஷாந்தை எம்எஸ் தோனி பாராட்டியிருந்தார். படிப்பு, நடிப்பு, திறமை என ஜாலியாக வலம் வந்த சுஷாந்த் பாட்னாவில் உள்ள செயின்ட் கெய்ர்னஸ் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்தார். பின்னர் டெல்லி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் படித்தார்.
அகில இந்திய பொறியியல் தேர்வில் 7ஆவது இடத்தை பிடித்தார் சுஷாந்த். இவருக்கு விண்வெளி, வான்வெளி, நட்சத்திரங்கள், சூரியன், நிலவு ஆகியவற்றின் மீது ஈர்ப்பு இருந்தது. இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரரான சுஷாந்த் நேற்று முன் தினம் தனது மும்பை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவபெருமான்
இந்த நிலையில் இவரது சொத்து மதிப்புகள் உள்ளிட்டவை குறித்து தற்போது பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. வீட்டில் தனியாக இருக்கும் போது வானத்தை பார்த்துக் கொண்டே இருப்பாராம். அதுதான் இவருக்கு மிகவும் பிடிக்குமாம். இவர் சிவ பக்தர் ஆவார். சமூக வலைதளங்களில் ஓம் குறித்தும் இந்த பிரபஞ்சமே சிவ பெருமானை பற்றியதுதான் என்பது குறித்தும் விளக்குவாராம்.

வளையங்கள்
இவரிடம் ஏராளமான விலையுயர்ந்த பொருட்கள் இருந்தன. அதில் அவருக்கு பிடித்தமானது விலையுயர்ந்த தொலைநோக்கி. சனி கிரகத்தில் உள்ள வளையங்களை பார்ப்பதற்காகவே மிகவும் விலையுயர்ந்த தொலைநோக்கியை அவர் வாங்கினாராம். இது உலகிலேயே நவீன தொலைநோக்கி என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூரிப்புடன் சுஷாந்த் பதிவு செய்திருந்தார்.

விமானி
கணினி வரைப்படங்கள் மூலம் விமானத்தில் விமானி பயன்படுத்தும் பகுதியை பிரித்துவிட்டு மீண்டும் இணைக்கும் இயந்திரத்தையும் இவர் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இவற்றை விமானிகள் பயிற்சி பெற பயன்படுத்துவார்கள். இவருக்கு பைக் ஓட்டுவதும் மிகவும் பிடிக்கும். இவரிடம் மிகவும் விலையுயர்ந்த அதிக ஸ்டைலான பிஎம்டபிள்யூ கே 1300 ஆர் ரக மோட்டார் சைக்கிள் இருந்தது.

ஸ்போர்ட் கார்
சொகுசு ஸ்போர்ட் காரான மசேரட்டி குவாட்ரோபோர்டோ, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி ஆகிய கார்களுக்கு சொந்தக்காரர். இவரின் மொத்த சொத்துகளின் மதிப்பு தோராயமாக ரூ 59 கோடியாகும். ஒரு படத்திற்கு ரூ 5 கோடி முதல் ரூ 7 கோடி வரை ஊதியமாக பெற்றதாக சொல்லப்படுகிறது.

நிலவில் இடம்
நிலவில் நிலம் வாங்கியவர் சுஷாந்த். நிலவில் இடம் வாங்கிய ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றிருந்தார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு வாங்கினார். சந்திரனின் தூர பகுதியில் இவர் வாங்கிய இடத்தின் பகுதிக்கு Sea of Muscovy அல்லது Mare Muscoviense என்று பெயராகும். இதை இவர் சர்வதேச சந்திர நிலங்கள் பதிவு அலுவலகம் மூலம் பெற்றார். இவருக்கு முன்னர் நடிகர் ஷாரூக்கான் நிலவில் இடம் வாங்கியிருந்தாலும் அவர் சொந்தமாக வாங்கவில்லை. ரசிகர் ஒருவர் வாங்கிக் கொடுத்தார். எனவே நிலவில் சொந்தமாக இடம் வாங்கிய ஒரே இந்தியர் சுஷாந்த் ஆவார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications