மாணவர்களை நாசாவுக்கு அனுப்புவது உள்பட 50 ஆசைகளை கைப்பட எழுதிய சுஷாந்த்.. நிராசையான வேதனை

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வாழ்நாளில் இவற்றை எல்லாம் செய்தே ஆக வேண்டும் என 50 விஷயங்களை பட்டியலிட்டு அவற்றை நிறைவேற்றாமலேயே போய்விட்டார் என அவரது நலம்விரும்பிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

Recommended Video

    Sushant Singh Rajputன் நிறைவேறாத ஆசைகள்

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று தனது மும்பை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்புக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென தெரியவில்லை. இவர் வெறும் பாலிவுட் நடிகர் மட்டும் அல்ல. டெல்லியில் கல்லூரியில் கடந்த 2003-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் 7ஆவது இடத்தை பிடித்தவர். அறிவியலை அறிந்து கொள்வதிலும் படிப்பதிலும் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்.

    நாசா கனவு.. டைம் டிராவல்.. புத்தக பிரியர்.. சுஷாந்த் சிங்கின் வீட்டில் இத்தனை விஷயங்கள் இருக்கா?

    சுஷாந்த்

    சுஷாந்த்

    அவரது கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் பாடுபட்டார் என அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது வாழ்நாளில் நிறைவேற்ற வேண்டும் என 50 கனவுகளை பட்டியலிட்டிருந்தார் சுஷாந்த். இதுகுறித்து அவர் தனது கைப்பட எழுதியிருந்தார்.

    செயற்கை நுண்ணறிவு

    செயற்கை நுண்ணறிவு

    இவர் கைப்பட எழுதிய அந்த 50 கனவுகள் அடங்கிய பட்டியல் தற்போது வைரலாகி வருகின்றன. விண்வெளி, வான்வெளி, அறிவியல் மீது அதிகம் ஆர்வம் கொண்ட சுஷாந்த் தனது வாழ்நாளில் 100 குழந்தைகளையாவது தனது சொந்த செலவில் நாசாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவில் பணியாற்ற விரும்பினார்.

    கார்

    கார்

    அது போல் பெண்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுத் தரவும் விரும்பினார். குழந்தைகளுக்கு யோகா, நடனம் உள்ளிட்டவற்றை கற்றுத் தர விரும்பிய அவர் லம்போர்கினி காரை வாங்க ஆசைப்பட்டார். விமானத்தை இயக்க கற்றுக் கொள்ள விரும்பினார். மேலும் ஒரு சாம்பியனுடன் டென்னிஸ் விளையாட வேண்டும் என விரும்பினார்.

    எரிமலை தீப்பற்றி

    எரிமலை தீப்பற்றி

    இதையடுத்து 1000 மரங்களை நட விரும்பிய அவர் அன்டார்டிகாவுக்கு பயணம் மேற்கொள்ள விரும்பினார். ஐரோப்பா முழுவதும் ரயில் மூலம் பயணம் செய்யவும் விரும்பினார். கிரிக்கெட் போட்டியை இடது கையால் விளையாடவும் கிரியா யோகாவை கற்றுக் கொள்ளவும் விரும்பினார். எரிமலை தீப்பற்றி எரியும் போது அதை புகைப்படம் எடுக்க விரும்பினார்.

    கிதார்

    கிதார்

    குறைந்தபட்சம் 10 வடிவங்கள் கொண்ட நடனத்தையாவது கற்க வேண்டும். விவசாயம் செய்வது எப்படி என கற்று கொள்ள வேண்டும். வில் வித்தை, சாம்பியனுடன் செஸ் விளையாட வேண்டும். எனக்கு பிடித்த 50 பாடல்களுக்கு கிதார் மூலம் வாசிக்க கற்று கொள்ள வேண்டும்.

    வைரலாகும் பட்டியல்

    வைரலாகும் பட்டியல்

    வியன்னாவில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கதீட்ரலை பார்வையிட வேண்டும். இந்திய பாதுகாப்பு படைக்கு தயாராக மாணவர்களுக்கு உதவ வேண்டும். ரெஸ்னிக் ஹாலிடே எழுதிய இயற்பியல் புத்தகத்தை முழுவதையும் படித்து முடிக்க வேண்டும் என 50 ஆசைகளையும் பட்டியலிட்டுள்ளார் சுஷாந்த். இந்த பட்டியல் தற்போது வைரலாகி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+