ஆஹா சீன் மாறுதே.. "அனுதாப அலை.." மகாராஷ்டிர அரசியலில் பெரிய ட்விஸ்ட்! பாஜகவுக்கு சிக்கல்? பரபர தகவல்
மும்பை: மகாராஷ்டிராவில் இப்போது உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாருக்கு ஆதரவாக அனுதாப அலை வீசுவதால் அங்கு போட்டி கடுமையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ரொம்பவே முக்கியமான மாநிலங்களில் ஒன்று மகாராஷ்டிரா. கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய இரு தேர்தல்களிலும் என்டிஏ கூட்டணி அங்கு மொத்தம் இருக்கும் 48 லோக்சபா தொகுதிகளில் 41இல் வென்றது.

ஆனால், கடந்த 2014 மற்றும் 2019 தேர்தலைப் போல மகாராஷ்டிராவில் இந்த முறை பாஜகவால் எளிதாக வெல்ல முடியாது என்கிறார்கள் வல்லுநர்கள். ஏனென்றால் இந்த முறை அங்கே பாஜகவுக்கு எதிராக சரத் பவார் உடன் உத்தவ் தாக்கரேவும் களத்தில் இருக்கிறார்.
அனுதாப அலை: இதற்கிடையே உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் ஆகியோருக்கு ஆதரவாக அனுதாப அலை வீசுவதால் மகாராஷ்டிராவில் என்டிஏ கூட்டணி இது ஈலியான தேர்தலாக இருக்காது என்று மகாராஷ்டிரா அமைச்சர் சாகன் புஜ்பால் கூறியுள்ளார். இவர் அஜித் பவாரின் தீவிர ஆதரவாளர் என்பதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாகப் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு புஜ்பால் அளித்த பேட்டியில், "உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் பிளவுபட்ட விதம் மற்றும் எங்கள் கட்சியின் (என்டிஏ) ஒரு பிரிவு மட்டும் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு கொடுத்துள்ளது ஆகிய நிகழ்வுகளால் அவர்களுக்கு அனுதாப அலை இருக்கிறது. இது அவர்களின் பிரச்சார கூட்டங்களில் தெளிவாகத் தெரிகிறது. இதனால் 2014 மற்றும் 2019இல் அடைந்ததை போல மோசமான தோல்வி இந்த முறை அவர்களுக்குக் கிடைக்காது என்றே நினைக்கிறேன்.. இருப்பினும், மக்களின் நம்பிக்கை இன்னும் நரேந்திர மோடி மீது உள்ளது. மோடி தலைமையிலான வலுவான அரசையே மக்கள் விரும்புகிறார்கள்" என்றார்.
எமோஷ்னல் ஆனார்: சரத் பவாரின் கோட்டையான பாராமதியில் சரத் பவார் தரப்பில் இருந்து மகள் சுப்ரியா சுலே போட்டியிடுகிறார். அஜித் பவார் தரப்பில் இருந்து அவரது மனைவி சுனேத்ரா போட்டியிடுகிறார். ஒரே தொகுதியில் இப்படி குடும்பத்திலேயே இரண்டு பேர் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு புஜ்பால் சற்று எமோஷ்னல் ஆனார். அவர் கூறுகையில், "எனக்குக் கூட வருத்தமா இருக்கிறது.. இத்தனை வருஷமா ஒரே வீட்டில் வாழ்ந்தவர்கள் இப்படிப் போட்டியிடுவது பலருக்கும் கஷ்டம் தான். இது யாருடைய தவறு என்பது வேறு விஷயம். ஆனால். இது நடக்காமல் இருந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்" என்றார்.
அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதாலேயே பாஜக 400 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளதாக ராகுல் விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலித்த புஜ்வால், "எதிர்க்கட்சிகள் இதை முக்கிய பிரச்சாரமாக எடுத்துச் செல்கிறார்கள். மக்களிடையேயும் தாக்கம் இருக்கிறது. கர்நாடகாவில் உள்ள பாஜக எம்பியும் (அனந்த்குமார் ஹெக்டே) இதை கூறியிருந்தார்.
மாற்ற முடியாது: ஆனால், அரசியல் சாசனம் வலிமையானது என்றும், அதை பி.ஆர்.அம்பேத்கரால் கூட மாற்ற முடியாது என்றும் பிரதமர் மோடி பலமுறை கூறியிருக்கிறார் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார். அஜித் பவார் தரப்பில் இருக்கும் மூத்த தலைவர் ஒருவரே இப்படி எதிர்த் தரப்பிற்கு இந்த முறை வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ளது மகாராஷ்டிராவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா மொத்தம் 48 எம்பிக்களை லோக்சபாவுக்கு அனுப்புகிறது. அதில் முதல் இரண்டு கட்டங்களில் முறையே 5, 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. அடுத்து மே 7 மற்றும் 13இல் தலா 11 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், மே 20இல் 13 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications