தில்ல பார்த்தீங்களா? உபி பள்ளிகளில் மராத்தி கற்று கொடுக்கனுமாம் யோகிக்கே லெட்டர் போட்ட பாஜக பிரமுகர்
மும்பை: உத்தரப் பிரதேச பள்ளிகளில் மாணவர்களுக்கு மராத்தி கற்றுக்கொடுக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு மகாராஷ்டிரா பாஜக மாநில துணைத் தலைவர் கிருபாசங்கர் சிங் கடிதம் எழுதி இருக்கிறார்.
தமிழ்நாடு தவிர்த்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை மூலம் விருப்பப் பாடமாக பெரும்பாலும் இந்தி கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தி திணிப்புக்கு எதிராக போராடி இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு நிலைநாட்டியதால் நமது மாநில பாடத்திட்டத்தில் இன்னும் இந்தி சேர்க்கப்படவில்லை.

வலதுசாரிகள் கருத்து
அதேநேரம் மத்திய அரசு அறிமுகப்படுத்தும் புதிய கல்விக் கொள்கையில் இதற்கு மாற்றாக மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு இந்தியை திணிக்கும் முயற்சிகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இந்தி கற்றால் வட மாநிலங்களில் வேலைக்கு செல்பவர்களுக்கு பயனளிக்கும் என்று வலதுசாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

தமிழர்கள் கருத்து
ஆனால், ஏராளமான வடமாநிலத்தவர்கள் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பிற மொழி பேசும் மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கே வேலைத் தேடி வருகின்றனர் என்பதால், அவர்கள் வேண்டுமானால் தமிழ் உள்ளிட்ட மொழிகளை கற்றுக்கொள்ளட்டும் என்ற வாதத்தை தமிழ், கன்னட அமைப்புகள் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.

பாஜக பிரமுகர் கடிதம்
பிராந்திய மொழி ஆர்வலர்கள் தொடர்ந்து கூறி வந்த இந்த கருத்து, தற்போது பாஜக தலைவரிடமே ஒலித்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநில பாஜக துணைத் தலைவராக இருப்பவர் கிருபாசங்கர் சிங். இவர் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், உத்தரபிரதேச பள்ளிகளில் மாணவர்களுக்கு மராத்தி மொழியை விருப்பப் பாடமாக வைக்க கோரிக்கை விடுத்து உள்ளார்.

மராத்தியை உபி பள்ளிகளில் போதிக்க கோரிக்கை
மராத்தியை மாணவர்கள் கற்றுக்கொண்டால் மகாராஷ்டிராவில் நல்ல வேலை கிடைக்கும் என்று கடிதத்தில் கூறியுள்ள கிருபாஷங்கர், உத்தரப் பிரதேசத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி முடித்த மாணவர்கள் பலரும் மகாராஷ்டிராவிற்கு வேலை தேடி வருவதாகவும், அவர்கள் மராத்தி மொழி புரியாமல் பல சிக்கல்களை சந்தித்து வருவதை தாம் 50 ஆண்டுகளாகக் கவனித்து வருகிறேன்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications