வாடகை மட்டும் ரூ.38 கோடி.. மும்பையில் டெஸ்லாவின் முதல் ஷோரூம்.. ஆட்டத்தை ஆரம்பித்த எலான் மஸ்க்!
மும்பை: உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் ஜூலை 15ஆம் தேதி திறக்க உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஷோரூம் திறக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே தனது முதல் காரினை ஆகஸ்ட் மாதத்திலேயே டெலிவரி செய்ய திட்டமிட்டிருக்கிறது. இதற்காக சீனாவில் உள்ள டெஸ்லா ஆலையில் இருந்து Y SUV ரக கார்களை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியா உள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலும் டெஸ்லா கார் ஷோரூமை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தொடங்க உள்ளார். ஜூலை 15ஆம் தேதி மும்பையில் உள்ள குர்லா பகுதியில் டெஸ்லா ஷோரூம் திறக்கப்படவுள்ளது. இதே பகுதியில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.

மும்பை விமான நிலையம் அருகில் இருப்பதால், டெஸ்லா நிறுவனம் இந்த பகுதியை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. டெஸ்லா ஷோரூம் தொடங்கப்பட்ட பின், அடுத்த வாரம் முதல் வாடிக்கையாளர்கள் டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை ஆர்டர் செய்யலாம் என்று தகவல் தெரிய வந்துள்ளது. இந்த ஷோரூமின் முதல் வாரத்தில் விஐபி-க்கள் மற்றும் தொழில் பங்குதாரர்கள் மட்டுமே பார்வையிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அடுத்த வாரம் முதல் டெஸ்லா ஷோரூமை பார்க்கலாம். அதேபோல் டெஸ்லா நிறுவனத்தின் முதல் பேட்ச் கார்கள் ஏற்கனவே சீனா ஆலையில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுவிட்டன. சீனாவில் இருந்து y suv ரக கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் ஆகஸ்ட் கடைசி வாரம் முதல் டெஸ்லா கார்கள் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் அமைக்கப்பட்டுள்ள டெஸ்லா ஷோரூமை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 4,003 சதுர அடியில் இந்த டெஸ்லா ஷோரூம் அமைந்திருக்கிறது. இதன்படி ஆண்டுக்கு ரூ.38.87 கோடி வாடகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மும்பையை தொடர்ந்து டெல்லியில் டெஸ்லா நிறுவனம் ஷோரூமை தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் டெஸ்லா நிறுவனம் தனது முதல் ஷோரூமை திறக்க உள்ளதையொட்டி அதன் எக்ஸ் பக்கத்தில், மும்பை நகரின் புகைப்படத்தை வெளியிட்டு டெஸ்லா, இந்தியா என்று பதிவிட்டுள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா நிறுவனங்கள் முதலீடு செய்வதை எதிர்த்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து டெஸ்லா நிறுவனமும் இந்தியாவில் கால் பதித்திருப்பது விவாதமாகி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications