பாருங்க கொடுமையை.. தடுப்பூசி போட சென்றவருக்கு நாய்க்கடி தடுப்பூசி.. நர்ஸ், டாக்டர் அதிரடி சஸ்பெண்ட்
தடுப்பூசிக்கு பதிலாக, ஒருவருக்கு ரேபிஸ் நாய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது
மும்பை: தடுப்பூசிக்கு பதிலாக, ஒருவருக்கு ரேபிஸ் நாய் தடுப்பூசி போட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட டாக்டர், நர்ஸ் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உலகை நடுங்க வைத்து கொண்டிருக்கும் இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. லட்சக்கணக்கான டாக்டர்களும், ஆராய்ச்சியாளர்களும் இதற்கான பணியில் அல்லும் பகலும் முழுநேரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம், கொரோனா தொற்றில் இருந்து தடுக்க இப்போதைக்கு தடுப்பூசிகள் மட்டுமே ஓரளவு பலன் தந்து வருகிறது.. அதனால், உலகம் முழுவதும் தடுப்பூசிகளை செலுத்துவதில் அந்தந்த நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.. மக்களும் ஒத்துழைப்பு தருகின்றனர்.

முதல் நர்ஸ்
முதன்முதலில், இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தபோது, நேரடியாக பொதுமக்களுக்கு செலுத்தாமல், களப்பணியாளர்களுக்கே செலுத்தப்பட்டது.. அதன்படி, நியூயார்க் நகரில் சான்ட்ராலின்ஸ்சே என்ற நர்சுக்கு முதலாவது தடுப்பூசி போடப்பட்டது... அந்த வகையில், கொரோனாவுக்கு எதிரான போரில் நர்ஸ்களுக்கான முக்கியத்துவங்கள் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.. அதற்கேற்றபடி எத்தனையோ நர்ஸ்கள், தங்கள் குடும்பத்தை மறந்து, சொந்தங்களையும் பெற்ற குழந்தைகளையும் மறந்து, மருத்துவ பணியில் தங்களை இழைத்து கொண்டு வருகின்றனர்..

மருத்துவ பணி
ஆனாலும், ஒருசில நர்ஸ்கள் தங்கள் பொறுப்புணர்ச்சியையும், கடமையையும் மறந்து அத்துமீறல்களிலும் அலட்சியங்களிலும் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றனர்.. மேலும், ஆஸ்பத்திரிக்கு வரும் தடுப்பூசியை, மக்களுக்கு செலுத்தாமல், அவற்றை திருடி சென்றும் உள்ளனர்.. இப்படியாக நம் நாட்டிலும் நடந்துள்ளது.. சம்பந்தப்பட்ட ஒருசில நர்ஸ்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது..

திருட்டு
இப்படித்தான் கடந்த மாதம், மன்னார்குடி அடுத்துள்ள பெறுகவாழ்ந்தான் அருகே காந்தாரி என்ற கிராமத்தில், தடுப்பூசி முகாம் நடந்தது.. ஏராளமான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வந்தபோது, அங்கிருந்த நர்ஸ் ஒருவர் செல்போன் பேசிக் கொண்டே, ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார்... அது வீடியோவாகவும் வெளியாகி, இறுதியில் அந்த நர்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப்போது இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது..

முகாம்
மகாராஷ்டிரா மாநிலம் தானே நகராட்சிக்கு உட்பட்ட கல்வா என்ற பகுதியில் ஆட்கோனேஷ்வர் சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது.. மேலும் தடுப்பூசி முகாமும் செயல்பட்டு வருகிறது... மருத்துவமனையும், முகாமும் ஒன்றாகவே இயங்கி வருகிறது.. அதனால், இங்கேயே பல்வேறு நோய்களுக்கு மருந்து தரப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராஜ்குமார் யாதவ் என்பவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள அந்த முகாமுக்கு சென்றிருக்கிறார்..

வெறிநாய்க்கடி
ஆனால், அங்கே ஒரு பெரிய கியூ நின்றுள்ளது.. இவ்வளவு கூட்டம் வரிசையில் நிற்பதை பார்த்ததுமே எல்லாருமே தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்திருக்கிறார்கள் என்று நினைத்து, அதே வரிசையில் போய் நின்றுள்ளார். அங்கிருந்த நர்ஸும் அவருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார்... அதன்பிறகுதான் தெரிய வந்தது, வெறிநாய்க்கடி எதிர்ப்பு தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்கள் தான் அந்த வரிசையில் நின்றிருந்தவர்களாம்.

சஸ்பெண்டு
இதை கேட்டு யாதவ் கடுமையான அதிர்ச்சி அடைந்தார்... இந்த விஷயம் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தெரியவந்ததையடுத்து, நர்ஸை சஸ்பெண்ட் செய்துவிட்டனர்.. அதேபோல பொறுப்பில் இருந்த டாக்டரும் சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.. தற்போது, கொரோனாவுக்கு பதிலாக வெறிநாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட யாதவை தீவிரமாக டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
Recommended Video

நடவடிக்கை
ஏற்கனவே, தடுப்பூசி முகாமில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்பட்டவருக்கு கோவாக்சின் போடப்பட்டு குழப்பமான சூழல் ஏற்பட்டு பிறகு அது சரி செய்யப்பட்ட சம்பவமும் நிறைய உண்டு.. இந்நிலையில், தானேவில் கொரோனா தடுப்பூசிக்கு பதில் ஒருவருக்கு ரேபிஸ் நாய் தடுப்பூசி போட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது... இதையடுத்து, பொதுமக்களுக்கு கொஞ்சம்கூட குழப்பம் ஏற்படாத வகையில் சுகாதாரத்துறையினரின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையாக விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications