Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவி ஷாலை நீக்கிவிட்டு போங்க! காஷ்மீர் பைல்ஸ் திரையிடப்பட்ட தியேட்டரில் சர்ச்சை! பாஜக விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ‛தி காஷ்மீர் பைல்ஸ்' படம் பார்க்க சென்ற பெண்களிடம் காவிஷால் அகற்றி தியேட்டருக்குள் செல்லும்படி கூறியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், ‛‛உத்தவ்ஜி இதுதான் உங்கள் இந்துத்துவா வடிவமா?'' என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

‛தி காஷ்மீர் பைல்ஸ்' என்ற திரைப்படம் மார்ச் 11ல் வெளியானது. இது 1990ல் காஷ்மீரில் இருந்து காஷ்மீரி பண்டித்கள் வெளியேறியதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் இந்தியா முழுவதும் பெரும் விவாத பொருளாகி உள்ளது.

இப்படத்துக்கு பாஜகவினர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ‛தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்பட குழுவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், உண்மையை வெளிப்படுத்தும் திரைப்படம் என அவர் கூறினார்.

வரிவிலக்கு

வரிவிலக்கு

இந்த படத்துக்கு ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த படத்துக்கும், பாஜகவின் செயலுக்கும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் திரைப்படம் மூலம் சமூகத்தில் வெறுப்பை பரப்ப பாஜக முயல்வதாக குற்றம்சாட்டியது. மேலும் உண்மையை மறைத்து படம் எடுக்கக்கூடாது என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

காவிஷால் அகற்ற...

காவிஷால் அகற்ற...

இந்நிலையில் தான் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள தியேட்டரில் ‛தி காஷ்மீர் பைல்ஸ்' படம் பார்க்க பெண்கள் குழுவாக சென்றனர். அவர்கள் காவிஷால் அணிந்திருந்தனர். இதை அகற்றிவிட்டு தியேட்டருக்குள் செல்லும்படி கூறியதாக சொல்லப்படுகிறது. இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் வந்து சமாதானம் செய்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

பாஜக விமர்சனம்

பாஜக விமர்சனம்

இந்நிலையில் இந்த சம்பவத்தை மேற்கொள்காட்டி மகாராஷ்டிராவை ஆட்சி செய்யும் சிவசேனா கட்சியையும், முதல்வர் உத்தவ் தாக்கரேவையும் அம்மாநில பாஜக விமர்சித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில், ‛‛நாசிக்கில் உள்ள தியேட்டரில் ‛தி காஷ்மீர் பைல்ஸ்' படம் பார்க்க சென்ற பெண்கள் அணிந்திருந்த காவிஷால்லை தியேட்டருக்கு வெளியே அகற்றும்படி கூறியுள்னர். என்ன உத்தவ்ஜி இதுதான் உங்களின் இந்துத்துவா வடிவமா?'' என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த பதிவை முதல்வர் உத்தவ்தாக்கரேவின் அலுவலகம் கையாளும் டுவிட்டர் பதிவுடன் டேக் செய்துள்ளது.

Recommended Video

    காஷ்மீர் பைல்ஸை எதிர்ப்பவர்களை விளாசும் இயக்குனர் அக்னிஹோத்ரி!
    வலுக்கும் மோதல்

    வலுக்கும் மோதல்

    மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜக இடையே நீண்டகால நட்பு இருந்தது. இது அரசியலில் கூட்டணியாக தொடர்ந்தது. இந்நிலையில் தான் அந்த மாநில சட்டசபை தேர்தலின்போது பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்து கொண்டது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் தற்போது சிவசேனா, பாஜக இடையே தொடர்ந்து மோதல் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+