உலகின் பணக்கார பிச்சைக்காரர் இவர் தான்.. பிச்சை எடுத்தே மாதம் 75 ஆயிரம் சம்பாதிக்கிறார்.. 7.5 கோடிக்கு சொத்து
மும்பை: ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கே பலரும் தினமும் மாடாய் உழைத்து பாடாய் படும் வேளையில், மும்பையில் பிச்சை எடுத்து வரும் ஒருவருக்கு ரூ.7.5 கோடிக்கு சொத்து உள்ளதாம். மேலும் ரூபாய் 1.4 கோடி மதிப்புள்ள 2 பிளாட்கள் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளதாம். இப்போதும் பிச்சை எடுத்து வரும் அவர் தான் உலகிலேயே நம்பர் ஒன் பணக்கார பிச்சைக்காரராக அறியப்படுகிறார்.
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான மருதமலை திரைப்படத்தில் வடிவேலு பிச்சைக்காரரை பார்த்து, "ஒரு பிச்சைக்காரனிடம் இவ்வளவு பணமா" என்று சொல்லும் காமெடி பலரையும் ரசிக்க வைத்திருக்கும். ஆனால் இங்கு பணக்காரர்களையே பொறாமைப்பட வைக்கும் அளவுக்கு ஒரு பிச்சைக்காரர் மும்பையில் பிச்சை எடுத்து வருகிறார்.. ஆம் இது உண்மை தாங்க..

பணக்கார பிச்சைக்காரர்
சொந்த வீடு வாங்க வேண்டும், நிலையான வருமானம் வேண்டும் என தினம் தினம் கஷ்டப்பட்டு உழைத்து வருபவர்கள் கூட இப்படி செட்டில் ஆனது கிடையாது. ஆனால், பாரத் ஜெயின் என்ற மும்பையில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர் பிச்சை எடுத்து சம்பாதித்து ரூ. 7.5 கோடிக்கு சொத்து சேர்த்து இருக்கிறார். மேலும் மும்பையில் ரூ. 1.4 கோடி மதிப்புள்ள 2 பிளாட்கள் அவருக்கு சொந்தமாக உள்ளதாம்.
நாட்டில் உள்ள மிகவும் பிசியான ரயில் நிலையங்களில் ஒன்றாக மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில், யாசகம் எடுக்கவும் பலரும் நின்று கொண்டு இருப்பதை பார்க்க முடியும். அதில் ஒருவர்தான் பாரத் ஜெயின் என்ற பிச்சைக்காரர். உலகின் பணக்கார பிச்சைக்காரராக அறியப்படும் இவருக்கு பல கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கிறது.
எவ்வளவு நேரம் பிச்சை எடுப்பார்?
ஆனாலும் தற்போதும் பிச்சை எடுப்பதை அவர் கைவிடவில்லை. பாரத் ஜெயின் ஒரு மாதத்திற்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறாராம். இந்த தொகை பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் மிட் லெவல் ஊழியர்களுக்கு இணையானது.
பாரத் ஜெயினுக்கு சொந்தமாக மும்பையில் சொந்த வீடு, சொத்துக்கள் என சுமார் 7.5 கோடிக்கு சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வரும் பாரத் ஜெயின், ஒருநாளைக்கு தினமும் 2 ஆயிரம் முதல் 2,500 வரை வருவாய் ஈட்டுகிறாராம். ஒரு நாளைக்கு 10 முதல் 1 மணி நேரம் வரை பிச்சை எடுக்கும் அவர் 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை வருவாய் ஈட்டுகிறாராம்.
சொந்தமாக 2 கடைகளும் உள்ளன
பிச்சை எடுப்பது மட்டும் இன்றி பாரத் ஜெயின் வேறு சில தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார். மும்பையில் 1.4 கோடி மதிப்புள்ள இரண்டு பிளாட்கள் அவருக்கு சொந்தமாக உள்ளது. இதில், தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள், சகோதரருடன் வசித்து வரும் பாரத் ஜெயினுக்கு சொந்தமாக இரண்டு கடைகளும் உள்ளன. இந்த கடைகள் மூலம் அவருக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது.
மும்பையில் உள்ள பிரபலமான கான்வெண்ட் பள்ளியில் இவரது மகன்கள் படித்து வருகிறார்கள். ஜெயினுக்கு சொந்தமாக ஸ்டேஷனரி கடை ஒன்றும் உள்ளது. பொருளாதார ரீதியாக செட்டில் ஆகிவிட்டாலும் பாரத் ஜெயின் இன்னமும் கூட தொடர்ந்து பிச்சை எடுத்து தான் வருகிறாராம்.












Click it and Unblock the Notifications