திருடப்போன வீட்டில் பணம், நகை இல்லை.. தூங்கி கொண்டிருந்த பெண்.. சபலப்பட்ட திருடனுக்கு தரமான சம்பவம்
மும்பை: திருடர்கள் பலர் பல விதங்களில் சுற்றுகிறார்கள். திருடப்போன வீட்டில் சிலர் கறி எடுத்து சமைத்திருந்தால், அதனை வயிறு முட்ட சாப்பிடுவார்கள். சிலர் திருட வந்த இடத்தில் மது மயக்கத்தில் குறட்டை விட்டு தூங்கிவிடுவார்கள். சிலர், திருட வந்த வீட்டில் திருட்டை மறந்து வேறு சில விஷயங்களையும் செய்வார்கள். அந்த வகையில் மும்பையில் கொள்ளையடிக்க வந்த வீட்டில், தூங்கி கொண்டிருந்த பெண்ணை திருடன் முத்தமிட்டார். அதனால் அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருட வந்த இடத்தில் திருட்டை தவிர வேறு வேலைகளை செய்தால் என்னாகும் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக வடிவேலு ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பார். திருடப்போன ஒரு வீட்டில் சாப்பிடுவார்.. அந்த சாப்பாட்டில் மருந்தை கலந்து வைத்திருப்பார்கள்.. திருடிவிட்டு சென்ற சிறிது நேரத்திலேயே வடிவேலுவுக்கு மயக்கம் வரும். அவர் கடைசியில் முரட்டு வைத்தியம் செய்து பிழைப்பார். இது சிரிப்புக்காக படத்தில் காட்டப்பட்டிருக்கும்..

ஆனால் உண்மையில் திருட வந்த வீட்டில் சிலர் மது அருந்திவிட்டு மயங்கி விழுந்துவிடுவார்கள். சிலர் திருட வந்த வீட்டில் சாப்பிட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். சிலர் திருட வந்த வீட்டிலேயே தூங்கிவிடுவார்கள். ஆனால் மும்பையில் கொள்ளையடிக்க வந்த வீட்டில், தூங்கி கொண்டிருந்த பெண்ணை திருடன் முத்தமிட்டார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
மும்பை மலாடு குரார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் திருடன் ஒருவர் பெண்ணின் வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்தார். வீட்டில் பல இடங்களில் தேடியபோது பணம், நகை என எதுவுமே திருடனுக்கு சிக்கவில்லை. இதனால் வெறுங்கையுடன் திருடன் வெளியே செல்ல முயன்றான். அப்போது, வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கண்ட திருடனுக்கு மோகம் ஏற்பட்டது.
இதையடுத்து பெண்ணின் அருகே சென்ற திருடன் திடீரென அவரை முத்தமிட்டார். இதனால் தூக்கத்தில் இருந்து விழித்த பெண் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.உடனே திருடன் அங்கிருந்து தப்பி சென்றான். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் திருடனின் அடையாளம் தெரியவந்ததை தொடர்ந்து, அவனை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications